அரிய வகை எலும்பு நோயால் அவதிப்படும் மாணவன்: தூக்கி சுமக்கும் நண்பர்கள்
யாத்கிர்: கர்நாடக மாநிலத்தில் அரிய வகை எலும்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 10ம் வகுப்பு மாணவரை அவரது நண்பர்கள் பள்ளிக்கு தூக்கிச் செல்கின்றனர்.
கர்நாடக மாநிலம் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள தாவரநாயக் தண்டா பகுதியைச் சேர்ந்தவர் அசோக் சவான்(16). தண்டாவில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
சவான் ஒரு அரிய வகை நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

15 வயது
15 வயது வரை சவான் பிற குழந்தைகளை போல ஓடி, ஆடி இருந்துள்ளார். திடீர் என்று ஒரு நாள் இடுப்பு வலிக்கிறது என்று தெரிவித்துள்ளார். அந்த வலி அதிகமாகி அவரால் நடக்கவே முடியாமல் போனது.

மருத்துவமனைகள்
அசோக் சவானுக்கு என்ன நோய் என்பதை கண்டறிய பெங்களூர், ஹைதராபாத் மற்றும் திருப்பதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று ரூ.1 லட்சம் செலவு செய்ததாக அவரது தந்தை தர்மா சவான் தெரிவித்தார்.

அரிய வகை எலும்பு நோய்
சோலாபூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அசோக் சவானை அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் தான் சவானுக்கு மியூகோபாலிசாக்கரைடோசஸ்(Mucopolysaccharidoses) என்ற அரிய வகை நோய் இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த நோய் வந்தால் எலும்புகள் பலவீனமாகிவிடுமாம். அதிலும் குறிப்பாக இடுப்பு மற்றும் மூட்டு பகுதி எலும்புகள் மிகவும் பலவீனமாகிவிடுமாம்.

பள்ளி
மகனுக்கு நடக்க முடியாமல் போனதை அடுத்து அவரை தர்மா தான் தினமும் பள்ளிக்கு தூக்கிச் சென்றார். ஆனால் அவரது மனம் மகனை சுமக்க தயாராக இருந்தாலும் அவரது வயது இடம் கொடுக்கவில்லை.

நண்பர்கள்
தர்மா படும் கஷ்டத்தை பார்த்த அசோக் சவானின் நண்பர்கள் தங்கள் நண்பனை ஒரு குழந்தையை போன்று தினமும் பள்ளிக்கு தூக்கிச் செல்கின்றனர்.

ஐ.ஏ.எஸ்.
சிறந்த மாணவர் என்று அசோக் சவானை ஆசிரியர்கள் புகழ்கிறார்கள். சவானுக்கு ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என்பது தான் கனவு ஆகும். அவரது கனவை நனவாக்க நண்பர்கள் பக்கபலமாக உள்ளனர். இதுவல்லவோ நட்பு!!!
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications