Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கனமழை.. கரை புரண்டோடும் வெள்ளம்.. எல்லாம் இந்த ரெண்டு தவளைங்கனால தான்.. டைவர்ஸ் பண்ணி வைத்த மக்கள்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வெளுத்து வாங்கிய மழை..தவளைகளுக்கு விவாகரத்து செய்து வைத்த மக்கள் | Divorce For Frogs

    போபால்: கொட்டித்தீர்க்கும் கனமழையை நிறுத்த தவளைகளுக்கு விவாகரத்து செய்த வியக்க வைக்கும் சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

    வெயில் அடிக்கும் போது மழை பெய்தால், காக்கைக்கும் நரிக்கும் திருமணம் நடக்கிறது, கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என ஏகப்பட்ட மூட நம்பிக்கைகள் இன்னமும் நம்மூரில் நிலவுகிறது.

    ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் தவளைக்கும் தவளைக்கும் திருமணம் செய்து வைத்து, பிறகு அவற்றிக்கு விவாகரத்தும் செய்து வைத்துள்ளார்கள் மத்தியப்பிரதேசத்தில். கொட்டித் தீர்க்கும் மழையை நிறுத்தவே இந்த ஏற்பாடாம்.

    ஆடம்பர திருமணம்

    ஆடம்பர திருமணம்

    இதன் முன்கதை ஓராண்டுக்கு முந்தையது. மத்தியப்பிரதேசத்தின் பல ஊர்களில் கடந்தாண்டு இறுதியில் மழை பெய்ய வேண்டி ஆஷாத் உத்ஷவ் என்ற பெயரில் தவளைகளுக்கு திருமணம் செய்யும் சடங்கு நடந்தது. இந்த சடங்கில் அம்மாநில அமைச்சர் மற்றும் பாஜக பிரமுகர்கள் கலந்துகொண்டு தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

    கூடுதல் மழை

    கூடுதல் மழை

    இதையடுத்து தற்போது மத்தியப்பிரதேசத்தில் கனமழை கொட்டித்தீர்க்கிறது. வழக்கத்தைவிட 26 சதவீதம் அதிகமாக மழை செய்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அணைகள் அனைத்து நிரம்பி வழிகின்றன. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    தவளை தான் காரணம்

    தவளை தான் காரணம்

    இந்த பெருமழைக்கு காரணம், கடந்தாண்டு தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்ததே என நம்புகிறார்கள் அந்த ஊர் மக்கள். இதையடுத்து தவளைகளுக்கு விவகாரத்து செய்து வைத்தால் மழை குறையும் என நம்பி, தவளைகளுக்கு விவகாரத்து செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    பொம்மை விவாகரத்து

    பொம்மை விவாகரத்து

    ஆனால் தவளைகள் கிடைக்காததால், இரண்டு பொம்மை தவளைகளை வைத்து விவாகரத்து செய்தனர் சில அமைப்பினர். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்துவிட்ட இன்றைய சூழ்நிலையில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது, பிறகு விவாகரத்து செய்து வைப்பது எல்லாம் எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை என கிண்டலடித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+