Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடல் முழுக்க தேச பக்தி; உயிரைப் பணயம் வைத்து 593 டாட்டூஸ்? இளைஞரின் வெறித்தனம்!

Subscribe to Oneindia Tamil

உத்தரப்பிரதேசம்: கார்கில் போரின்போது தங்களின் உயிரை நாட்டிற்காகத் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக உடல் முழுவதும் அவர்களில் பெயரை 593 இடங்களில் ஒரு இளைஞர் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

உலகில் தேசப் பற்று இல்லாத மனிதர்கள் மிகக் குறைவு. அவரவருக்கு அவரது தேசம் முக்கியம். அவர்களின் தலைவர்கள் முக்கியம். அப்படித்தான் உலக வரலாறு இயங்கி வருகிறது. ஒரு காலத்தில் இந்திய விடுதலைக்காகப் போராடியவர்களை தங்களின் நெஞ்சில் பச்சை குத்திக் கொண்டவர்கள் இருந்தார்கள். இன்றைக்கு நடிகர்களின் படத்தை ரசிகர்கள் டாட்டூ போட்டுக் கொள்கிறார்கள். விடுதலைக்குப் போராடிய உண்மையான ஹீரோக்களைவிட, திரையில் தோன்றி மறையும் நடிகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

Kargil war Uttar Pradesh

இந்தக் காலத்திலும் தேசப் பற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டும்படி ஒரு விசயத்தைச் செய்திருக்கிறார் ஒரு இளைஞர். 1999 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கார்கில் போரில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் பெயரை இவர் தன் உடல் முழுவதும் பச்சை குத்தி வைத்துள்ளார்.

ஏறக்குறைய உடலில் 560 இந்திய ராணுவ வீரர்களின் பெயர்களைப் பச்சை குத்திக்கொண்டுள்ளார். கூடவே சமீபத்தில் உயிர்நீத்த வீரர்களின் பெயர்களையும், காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங் போன்ற தலைவர்களின் உருவங்களையும் சேர்த்து மொத்தம் 593 உடலில் இடங்களில் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

காதலியின் பெயரைப் பச்சை குத்திக் கொள்ளும் தலைமுறையினர் மத்தியில் 30 வயதாகும் இளைஞர் அபிஷேக் கௌதம் இந்தத் தியாக செய்தல் பலரது மனங்களை வென்றுள்ளது. இந்த முழு டாட்டூகளையும் உடம்பில் குத்திக் கொள்ள எட்டு நாட்கள் வரைப் பிடித்துள்ளது. ஒவ்வொரு நாளும் அவர் ஆறு மணி நேரம் உருவங்களை மையால் வரைந்து கொள்ளச் செலவழித்துள்ளார். இது பற்றிப் பேசிய உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூரைச் சேர்ந்த கௌதம், "கார்கில் போர் நடக்கும்போது நான் சிறுவனாக இருந்தேன். அப்போது எனக்கு அது பற்றி அதிகம் தெரியவில்லை. வளர்ந்து பெரியவனான பிறகு நாட்டுக்காகத் தியாகம் செய்தவர்கள் மீது காதல் வந்தது. அதுதான் உண்மையாகக் காதல். எனவே அந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்ய நினைத்தேன். அதற்காக என் உடலில் பச்சை குத்திக் கொண்டேன்.

தொடர்ந்து பேசிய அவர், "கடந்த ஆண்டு நான் லே லடாக் சென்றேன். இந்திய ராணுவம் எனது நண்பர் ஒருவரைக் காப்பாற்றியது. எங்கள் பயணம் முழுவதும் வீரர்கள் எப்போதும் இருந்ததால் நாங்கள் பாதுகாப்பாக உணர்ந்தோம். அன்று மனதில் இதைச் செய்ய வேண்டும் என்று தோன்றியது. ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டி இதைச் செய்ய நான் முடிவு செய்தேன்" என்கிறார். '

இதற்காக ஒரு வருடம் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் பெயர்களை ஆராய்ந்துள்ளார் இவர். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலரை நேரில் போய் சந்தித்தார். பின்னர் அவர் டெல்லியில் உள்ள ஒரு டாட்டூ கலைஞரைத் தொடர்பு கொண்டுள்ளார். அவர் டாட்டூவை வரையத் தலைவர்களின் மாதிரி படத்தைச் செய்து காட்டியுள்ளார். அவர் வடிவமைத்த முகங்களைப் பின்னர் உடலில் குத்திக் கொண்டுள்ளார் இந்த இளைஞர்.

"பச்சை குத்திக்கொள்வதற்கு முன்னால், மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டேன். அது ஒரு நீண்ட விளக்க முறையாக இருந்தது. தொடர்ந்து பச்சை குத்துவதற்கு உடல் சில எதிர்வினைகளை ஆற்றலாம் என்று அவர் அறிவுறுத்தினார். ஆனாலும், நான் தைரியமாகத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்தேன்" என்கிறார் இவர். இவர் இப்படி பச்சை குத்திக் கொண்டது அவரது வீட்டில் யாருக்கும் தெரியாது. இன்னும் அழுத்திச் சொன்னால் அவரது மனைவி உட்பட குடும்ப உறுப்பினர்கள் யாருக்குமே தெரியாது.

"15 நாட்களுக்குப் பிறகுதான் குடும்பத்தினர் நான் பச்சை குத்தியதைப் பற்றி அறிந்து கொண்டனர். இப்போது எல்லாம் தேசபக்தி என்பது தற்காலிக இருக்கிறது. மக்கள் அதைப் பற்றி எல்லாம் அக்கறைகொள்வதில்லை. சுதந்திர தினம் அல்லது குடியரசு தினம் வந்தால் நாட்டைப் பற்றி நினைக்கிறார்கள். அப்படி இல்லை என்றால் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெறும் அன்று மட்டும் மக்கள் தேசபக்தி பெறுகிறார்கள்.

அந்தப் போட்டி இல்லையெனில் இவர்கள் எந்தக் கவலையும் படமாட்டார்கள். என்னால் இந்திய ராணுவத்தில்தான் சேர முடியவில்லை. ஆனால், நான் ஒவ்வொரு நாளும் தேசபக்தியைப் பெறுகிறேன். எனக்கு அந்த உணர்வு எப்போது உள்ளது. இனிமேல் என் உடலிலுள்ள இந்தப் பச்சை ஒவ்வொரு நாளும் அதை எனக்கு நினைவுபடுத்தும்"என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+