ஏர் இந்தியா விபத்து.. "அந்த" 98 செகன்ட் முக்கியம்! ஒவ்வொரு நொடியும் என்ன நடந்தது! வெளியான ரிப்போர்ட்
டெல்லி: கடந்த மாதம் நடந்த ஏர் இந்தியா விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் விமானத்தின் இரட்டை இஞ்சின் செயலிழப்பே விபத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே விமானம் புறப்பட்டது முதல் அது விபத்திற்குள்ளானது வரை ஒவ்வொரு நொடியும் என்ன நடந்தது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
விமானம் புறப்படுவதற்கு அனுமதி கிடைத்த பிறகு, மதியம் 1:38 மணிக்கு விமானம் புறப்பட்டது. ஆனால், இந்த ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானம் வெறும் 32 வினாடிகள் மட்டுமே பறந்தது, அதற்குள் அது விபத்துக்குள்ளானது. மதியம் 1:38 மணியளவில், புறப்படும்போது ஒரு எஞ்சின் மணிக்கு 284 கிமீ வேகத்தை எட்டியது. அடுத்த இரண்டு வினாடிகளில், விமானம் மணிக்கு 287 கிமீ வேகத்தில் அது புறப்பட்டது. அதாவது ரன்வேயில் இருந்து கிளம்பிப் பறக்க ஆரம்பித்தது.

இரட்டை எஞ்சின் செயலிழப்பு
அடுத்த மூன்று வினாடிகளில், விமானம் மணிக்கு 334 கிமீ வேகத்தில் அதிகபட்ச வேகத்தைப் பதிவு செய்தது. அப்போது திடீரென இரண்டு எஞ்சின்களும் செயலிழந்தன.. இதனால் விமானம் உயரத்தை இழக்க ஆரம்பித்த நிலையில், RAT (ராம் ஏர் டர்பைன்) பயன்படுத்தப்பட்டது. பொதுவாக இரட்டை எஞ்சின் செயலிழப்பு அல்லது மின்சாரம் அல்லது ஹைட்ராலிக் இழப்பு ஏற்பட்டால் இந்த RATகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஏன் பயன் தரவில்லை?
ஏர் இந்தியா விபத்து தொடர்பான வீடியோக்களில் இது நமக்குத் தெளிவாகத் தெரியும். இருப்பினும், குறைந்த உயரத்தில் குறிப்பாகப் புறப்படும்போது, போதிய வேகம் இருக்காது. அப்போது டர்பைனுக்கும் தேவையான காற்று கிடைக்காது. இதனால் இந்த மாதிரியான காலங்களில் ராட்களை RAT செயல்படுத்துவது பெரும்பாலும் பயனற்றது என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
முக்கியமான நேரம்
11:17- விமானம் டெல்லியிலிருந்து அகமதாபாத் வந்தடைந்தது.
11:55 - விமான ஊழியர்கள் வழக்கமான சோதனை செய்தனர்.
12:10 - தொழில்நுட்பச் சோதனைக்குப் பிறகு விமானம் புறப்படத் தயாரானது
12:35 - விமான ஊழியர்கள் போர்டிங் கேட்டை அடைந்தனர்.
1:18:38pm- விமானம் பே 34இலிருந்து புறப்பட்டது
1:25:15pm - ஓடுபாதைக்குச் செல்ல டாக்ஸி (ஓடுபாதைக்குச் செல்லும் பிராசஸ்) அனுமதி பெறப்பட்டது
1:26:08 PM- விமானம் டாக்ஸி தொடங்கியது
1:37:33 PM- புறப்பட அனுமதி வழங்கப்பட்டது
1:37:37 PM- விமானம் டேக் ஆஃப் ஆக ஆரம்பித்தது
1:38:33 PM- V1 வேகம் (153 Kts IAS) எட்டப்பட்டது
1:38:35 PM- Vr வேகம் (155 Kts) எட்டப்பட்டது
1:38:39 PM- விமானம் பறக்க ஆரம்பித்தது. விமானம் முழுமையாகத் தரையில் இருந்து புறப்பட்டது.
1:38:42 PM- விமானம் அதிகபட்சமாக 180 Kts IAS வேகத்தை எட்டியது.
உடனடியாக எஞ்சின் 1 & 2 எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகள் CUTOFFக்கு மாற்றப்பட்டன
1:38:47 PM- RAT (ராம் ஏர் டர்பைன்) பயன்படுத்தப்பட்டது; விமானம் சரிய ஆரம்பித்தது
1:38:52 PM- எஞ்சின் 1 எரிபொருள் கட்ஆப் மீண்டும் RUN என்பதற்கு மாற்றப்பட்டது
1:38:54 PM- எமர்ஜென்சி காலத்தில் விமானத்தைப் பறக்க வைக்கும் APU இன்லெட் டோர் திறக்கத் தொடங்கியது.
1:38:56 PM - எஞ்சின் 2 எரிபொருள் கட் ஆஃப் மீண்டும் RUNக்கு மாற்றப்பட்டது.
1:39:05- விமானத்தின் நிலைமை மோசமானதால் பைடல் MAYDAY அழைப்பு விடுத்தார்.
1:39:11 PM விமானம் விபத்திற்குள்ளானது.. டேட்டா பதிவாவது நிறுத்தப்பட்டது.
விபத்தைத் தடுக்க முடியவில்லை
இரட்டை இன்ஞ்சின் செயலிழந்த பிறகு சில நொடிகளில் மீண்டும் அது தானாகச் சரியாகத் தொடங்கியது. மீண்டும் எரிபொருள் கட் ஆஃப் RUN நிலைக்கு வந்தது அதையே காட்டுகிறது. ஆனால், விமானம் அதற்கு முன்பே வேகமான உயரத்தை இழக்க ஆரம்பித்ததால் விமானத்தைக் காப்பாற்ற முடியவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
மதியம் 1:39 மணிக்கு MAYDAY அழைப்பை விமானிகள் விடுத்துள்ளனர். இருப்பினும், அப்போது விமானம் விமான நிலைய எல்லைக்கு வெளியே இருந்ததால் பைலட்டிற்கு எந்தவொரு ரெஸ்பானஸும் கிடைக்கவில்லையாம்.


Click it and Unblock the Notifications
