'உலக மகா நடிப்புடா சாமி'.... பிரிண்ட்டிங் எர்ரராம்.. 'காந்தி ஜெயந்தி' லீவ் ரத்து பற்றி கோவா அரசு!
பனாஜி: தேசத் தந்தை காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2- ந் தேதியன்று விடுமுறை ரத்து செய்யப்படமாட்டாது என்றும் அரசு வெளியிட்ட விடுமுறைப் பட்டியலில் 'பிரிண்டிங் எர்ரர்" காரணமாக காந்தி ஜெயந்தி இடம்பெறவில்லை என்றும் அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
கோவாவை ஆளும் பாரதிய ஜனதா அரசு. கோவா மாநிலத்தில் லட்சுமிகாந்த் பர்சேகர் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டின் அரசு விடுமுறை பட்டியலில் இருந்து காந்தி ஜெயந்தி நீக்கப்பட்டிருப்பதாக அங்கு பெரும் சர்ச்சையை ஏற்பட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆனந்த ஷர்மா கூறுகையில், காந்தி நமது தேசத்தந்தை, அவரது பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி கொண்டாடுகிறோம். கடந்த ஆண்டு குழந்தைகளை பள்ளிக்கு வர வேண்டும் என்று வற்புறுத்திய அரசாங்கம், இந்த ஆண்டு விடுமுறை பட்டியலில் இருந்தே காந்தி ஜெயந்தியை நீக்கியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார்.
இதனிடையே அச்சிட்டும் போது ஏற்பட்ட பிழைதான் காரணமே தவிர. காந்தி ஜெயந்திக்கான விடுமுறையை ரத்து செய்யும் நோக்கம் அரசுக்கு இல்லை என்று முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் கோவா மாநிலத்தில் காந்தி ஜெயந்திக்கான அரசு விடுமுறை தொடரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications