ஓடும் ரயிலில் காதலியை மணந்த 'டான்' அபு சலீம்..ஒரு 'கிரைம் கிங்கின் திரில் லவ்'!
மும்பை: கடந்த 12 வருடங்களாக சிறையில் அடைபட்டுக் கிடந்தாலும், நிழலுக தாதா அபு சலீமின் தனிப்பட்ட வாழ்க்கை என்னவோ பிரகாசமாகத்தான் இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவருக்குள் காதல் மலர்ந்துள்ளது.. மலர்ந்த காதலை.. ஓடும் ரயிலில் வைத்து கரம் பிடித்து மனைவியாக்கியும் உள்ளார்.
2002ம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டவர் அபு சலீம். அவரது காதல் கதை திரைப்படங்களுக்கு நிகரான திரில்லிங்கையும், விறுவிறுப்பையும் கொண்டுள்ளது.
கோர்ட்டுக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்டபோதுதான் இந்த திடீர் திருமணத்தை நடத்தியுள்ளார் அபு சலீம். அவர் மணந்துள்ள பெண் மும்பையைச் சேர்ந்தவர்.

லக்னோ போகும் வழியில் 'லவ்லி மேரேஜ்'....!
லக்னோவுக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அபு சலீமை போலீஸார் கொண்டு சென்றபோதுதான் அபு சலீமீன் நிக்கா நடந்துள்ளது.

போன் மூலம் திருமணச் சடங்குகள்
மும்பையைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் மத குரு, செல்போனில் சம்பிரதாயங்களை மேற்கொள்ள தனது காதலியை மணந்துள்ளார் சலீம்.

2 போலீஸார் முன்னிலையில்
அபு சலீமுடன் இரண்டு போலீஸார்தான் பாதுகாப்புக்குப் போயுள்ளனர். மேலும், அவதரு உறவினர் ரஷீத் அன்சாரி என்பவரும் அந்தப் பெட்டியில் பயணித்துள்ளார். இவர்கள்தான் இந்தத் திருமணத்திற்கு சாட்சியாக இருந்துள்ளனர்.

யார் அந்தப் பெண்..?
அபு சலீம் மணந்து கொண்ட பெண்ணின் விவரங்கள் எதுவும் தெரியவில்லை. அவருக்கு 27 வயதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அடிக்கடி இவர் அபு சலீமின் வழக்குகள் நிலுவையில் உள்ள மும்பை தடா கோர்ட்டுக்கு வந்து போனாராம்.

சலீமின் பிசினஸ் முழுவதும் புது மனைவி கையில்
தற்போது மும்பையில் சலீம் முன்பு நடத்தி வந்த சில தொழில்களை அவரது புது மனைவிதான் தனது கட்டுப்பாட்டில் எடுத்து நடத்தி வருகிறாராம்.

ஜனவரி 8ம் தேதி
இந்த ஓடும் ரயிலில் நடந்த திருமணம் ஜனவரி 8ம் தேதி அரங்கேறியுள்ளது.

விளக்க மறுக்கும் போலீஸ்
இந்தத் திருமணம் குறித்து மும்பை போலீஸாரும் சரி, லக்னோ போலீஸாரும் சரி விளக்கம் தர மறுத்துள்ளனர். பாதுகாப்பு கொடுப்பது மட்டுமே எங்களது வேலை. ரயிலில் என்ன நடந்தது என்பது குறித்து நாங்கள் தெரிவிக்க இயலாது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

மோனிகா பேடி
சலீமின் வாழ்க்கை எப்போது வண்ணமயமானதாகவே இருந்தது. முன்பு மோனிகா பேடியை மணந்து கொண்டார். இவரும், சலீமும் சேர்த்துத்தான் போர்ச்சுகல்லிலிருந்து நாடு கடத்தப்பட்டனர். ஆனால், தான் சலீமை மணக்கவில்லை என்று பின்னர் மறுத்து விட்டார் மோடி.

2002 முதல் சிறையில்
46 வயதான சலீம், 2002ம் ஆண்டு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டார். அது முதல் அவர் சிறையில்தான் இருந்து வருகிறார். இசையமைப்பாளர் குல்ஷன் குமார், நடிகை மனீஷா கொய்ராலாவின் செயலாளர் பிரதீப் ஜெயின் உள்ளிட்டோர் கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் இவர் மீது உள்ளன.

ஹ்ரித்திக் ரோஷன் அப்பாவைக் கொல்ல முயன்றவர்
நடிகர் ஹ்ரித்திக் ரோஷனின் தந்தை ராகேஷ் ரோஷன் மற்றும் ராஜீவ் பய் ஆகியோரைக் கொல்லவும் முயன்று அதில் தோல்வி அடைந்தவர் சலீம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications