For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆண்களை இழுக்கும் நோய் ஆசாராம் மீது புகார் கூறிய சிறுமிக்கு உள்ளது - ஜெத்மலானி

Google Oneindia Tamil News

ஜோத்பூர்: சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் பலாத்கார புகார் கூறிய சிறுமிக்கு வினோதமான நோய் உள்ளது. அதாவது ஆண்களை இழுக்கும் நோய் அச்சிறுமிக்கு உள்ளது என்று ஆசாராமின் வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி கூறியுள்ளார்.

ஆசாராம் பாபு தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் ஜோத்பூர் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசாராம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதிடுகையில், போலீஸார் தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் நிறைய தவறுகள் உள்ளன. குற்றம் நடந்தபோது இருந்த நிகழ்வு, அ்ப்பெண்ணின் வயது உள்பட அனைத்திலுமே முறைகேடு நடந்துள்ளது.

Girl has disease that draws her to men: Asaram's lawyer

இச்சிறுமிக்கு நீண்ட காலமாகவே ஒரு நோய் உள்ளது. அதாவது ஆண்களை வளைக்கும் நோய் அது. இதுகுறித்து காவல்துறையினரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது விசாரணையிலும் இதுகுறித்து விசாரிக்கப்பட்டுள்ளளது என்றார் ஜெத்மலானி.

சுமார் ஒரு மணி நேரம் வாதாடினார் ஜெத்மலானி. அதன் பின்னர் நீதிபதி நிர்மல் ஜீத் கெளர், விசாரணையை செப்டம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் கேஸ் டைரியை அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்யுமாறும் காவல்துறைக்கு அவர் உத்தரவிட்டார்.

English summary
The Jodhpur bench of the Rajasthan high court on Monday deferred the hearing on the bail application of Asaram Bapu till September 18. The court has also directed the prosecution to present the case diary in the court during the next hearing. Meanwhile, the defence completed its arguments, which lasted for over an hour, in a jam-packed courtroom. Senior advocate Ram Jethmalani, who appeared as the defence counsel to argue on the bail plea of Asaram, raised the same points as those in the district and sessions court during the first bail application.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X