நான் கர்ப்பம்.. என்னாலதான் "முடியாதே".. அப்புறம் எப்படி.? கலகலக்க வைக்கும் வைரல் வீடியோ!
மற்றவர்களை ஏமாற்றப் போய் சமயத்தில் தனக்குத் தானே பல்ப் வாங்கிக் கொள்ளும் சம்பவங்களும் நடக்கத் தான் செய்கின்றன.
அவ்வாறு, இளம் ஜோடி ஒன்றிற்கு இடையே நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வீடியோ வைரலாகப் பரவியுள்ளது.
மூன்றாண்டுகள் சேர்ந்து வாழும் தனது பாய் பிரண்டை ஏமாற்றத் திட்டமிடுகிறாள் இளம்பெண் ஒருவர். ஆனால், கடைசியில் அவரே ஏமாந்து போய் அசடு வழிகிறார்.

கர்ப்ப நாடகம்...
தனது பாய் பிரண்டுக்குத் தெரியாமல் கேமரா ஒன்றை ஒளித்து வைத்துப் படம் பிடித்துள்ளார் இப்பெண். அதாவது, தன் பாய்பிரண்டை அழைத்து தான் கர்ப்பமாக இருப்பதாக நாடகமாடுகிறார் காதலி.

ஆதாரம்...
மேலும், கடந்த 4 மாதங்களாக தான் கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறுகிறார். இது தொடர்பாக கர்ப்பம் உறுதியான ஆதாரங்களையும் அவர் காட்டுகிறார்.

அதிர்ச்சி...
காதலி கூறிய தகவலால் சந்தோஷத்திற்குப் பதில் ஷாக்காகிறார் காதலர். காதலி தனக்கு துரோகம் செய்து விட்டதாக அவர் கத்துகிறார்.

சண்டை...
இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண், இல்லை இது உங்கள் குழந்தைதான் என வாதாடுகிறாள். ஆனால், தான் ஆண்மையில்லாதவன் என்றும், இது நிச்சயமாக தனது குழந்தை இல்லை என்றும் சண்டை போடுகிறான் காதலன்.

ஏமாற்றம்... அழுகை
காதலன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடையும் அப்பெண், அழுது கொண்டே'இதை ஏன் இத்தனை நாள் என்னிடம் மறைத்தாய்' எனக் கேட்கிறாள். காதலனை ஏமாற்ற நினைத்து தான் ஏமாற்றப் பட்டதை எண்ணிக் கதறிக் கதறி அழுகிறாள்.

திடீர் திருப்பம்...
அப்போது திடீர் திருப்பமாக காதலன் சிரிக்கிறார். காதலனின் சிரிப்பிற்கான காரணம் புரியாமல் விழிக்கிறார் காதலி.

பதிலுக்கு பதில்...
அதனைத் தொடர்ந்து, கர்ப்பம் என்று சொல்லி தன்னை ஏமாற்ற முயற்சித்தது தனக்குத் தெரியும் என மறைத்து வைத்திருக்கும் கேமராவைக் காதலியிடம் காட்டுகிறார் காதலர். அதோடு, காதலியை ஏமாற்றவே தானும் பதிலுக்கு ஷாக் தந்ததாகக் கூறுகிறார்.
வைரல்...
விளையாட்டுத் தனமாக ஆரம்பித்து, நடுவில் பரபரவென சூடு பிடித்து பின்னர் சுமூகமாக முடியும் இந்த வீடியோவை இதுவரை யூடியூப்பில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications