டெல்லி பல்கலைக்கழக கழிப்பறையில் மாணவிகளை ஆபாசமாக படமெடுத்த மர்ம நபர்!
டெல்லி: டெல்லி பல்கலைக் கழக மாணவிகள் கழிப்பறையில் ஒளிந்திருந்து மர்ம நபர் ஒருவர் செல்போனில் தங்களை ஆபாசமாக படமெடுத்தாக குறிப்பிட்ட சில மாணவிகள் சார்பில் போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.
நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் டெல்லி பல்கலைக்கழக கழிப்பறைக்குச் சென்ற முதுகலை பயிலும் மாணவிகள் சிலர், மர்மநபர் ஒருவர் ஒளிந்திருந்து கழிவறைக் காட்சிகளை செல்போனில் படமெடுப்பதைக் கண்டு அதிர்ந்து போய் கூச்சலிட்டுள்ளனர்.
மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு மற்ற மாணவ-மாணவிகள் அங்கு வந்து சேரும் முன் சம்பந்தப் பட்ட நபர் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.
உடனடியாக, இது குறித்து போலீசுக்கும், பல்கலைக் கழக நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீசார் பல்கலைக் கழக எல்லைக்குள் இருந்தவர்களின் செல்போன்களை சோதனைச் செய்துள்ளனர். ஆனால், குற்றவாளி சிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, மாணவிகள் அளித்த புகாரை பதிவு செய்து, குற்றவாளியைத் தேடும்பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனக் கோரி, பல்கலைக் கழக மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போலீஸ் மற்றும் நிர்வாகத்திற்கெதிராக கோஷங்களை எழுப்பினர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications