தாயை உயிரோடு எரித்த கொலைகார தந்தை.... சமூக வலைதளங்களில் நீதி கோரும் சிறுமிகள்!!
லக்னோ: தந்தையால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட தங்களது தாய்க்கு சமூக வலைத்தளங்களில் இரண்டு சிறுமிகள் நீதி கேட்டு வருகின்றனர்.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தேவிபுரா பகுதியில் வசிப்பவர் மனோஜ் பன்சால். இவருக்கு 15 மற்றும் 11 வயதுடைய இரண்டு மகள்கள் உள்ளனர். சிறுமிகள் இருவரின் கண் முன்னே மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்ததாக சிறுமிகள் இருவரும் தந்தையின் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக கடந்த ஜுன் மாதம் 14ம் தேதி அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவிற்கு கடிதம் ஒன்றை சிறுமிகள் இருவரும் எழுதியுள்ளனர். அதில் தங்களைப் பெற்றெடுத்த தாயை, தந்தையும் மற்றும் சிலரும் சேர்ந்து தீ வைத்து எரித்தனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளவர்களை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை என்றும் சிறுமிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மாநில முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அவர்கள் இருவரும் சமூக வலைத்தளங்களில் தங்களது அவல நிலையை தெரிவித்து, நீதி கேட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, போலீசார் அதிகாரி மான் சிங் சவுகான், இந்தக் கொலைக் குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாகவும், குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சிறுமிகள் இருவருக்கும் தகுந்த பாதுகாப்பும் அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications