ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மீண்டும் சந்தித்த ஜி.கே.வாசன்! காவிரி பிரச்சனையில் தலையிட வலியுறுத்தல்!!
காவிரி பிரச்சனையில் தலையிட கோரி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ஜி.கே.வாசன் நேற்று இரவு சந்தித்து வலியுறுத்தினார்.
டெல்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மீண்டும் சந்தித்து பேசினார். காவிரி பிரச்சனையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலையிடக் கோரி சந்தித்ததாக வாசன் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் பிரணாப் முகர்ஜியை நேற்று இரவு ஜி.கே.வாசன் சந்தித்தார். இச்சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது.

இச்சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், காவிரி பிரச்சனையில் ஜனாதிபதி தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினேன். காவிரி டெல்ட மாவட்டங்களில் உயிரிழந்து வரும் விவசாயிகளுக்கு மத்திய அரசு நட்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
மேலும் தமிழக மீனவர்கள் உரிமை பாதுகாக்கப்பட இலங்கை அரசுக்கு மத்திய அரசு உரிய அழுத்தத்தை தர நடவடிக்கை தேவை என்றும் ஜனாதிபதியை கேட்டுக் கொண்டேன்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேருவதற்கு முயற்சித்த போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசியிருந்தார். தற்போது மீண்டும் ஜனாதிபதியை வாசன் சந்தித்ததில் வேறு அரசியல் காரணங்கள் பின்னணியில் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications