பாலியல் புகார்: டெஹல்கா ஆசிரியர் சோமாவிடம் 9 மணிநேரம் துருவித் துருவி விசாரணை

Subscribe to Oneindia Tamil

Goa police questions Tehelka editor Shoma Chaudhury for over nine hours
டெல்லி: பெண் ஊழியையிடம் டெஹல்கா நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பால் தவறாக நடந்து கொண்ட விவகாரம் தொடர்பாக அந்த பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியர் ஷோமா சவுத்ரியிடம் கோவா போலீசார் 9 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

டெஹல்கா பத்திரிக்கையின் நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். இந்த சம்பவம் பற்றி கோவா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேஜ்பால் அந்த பெண்ணிடம் இமெயில் மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் தான் தவறாக எதுவும் செய்யவில்லை என்று தேஜ்பால் கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் கோவா போலீசார் டெஹல்கா பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியரான ஷோமா சவுத்ரியிடம் விசாரணை நடத்தக்கூடும் என்று கூறப்பட்டது. அதன்படி நேற்று மாலை 4.30 மணிக்கு தெற்கு டெல்லியில் உள்ள பத்திரிக்கை அலுவலகத்திற்கு சென்ற கோவா போலீஸ் குழு ஷோமா சவுத்ரி மற்றும் சில ஊழியர்களிடம் இரவு 2 மணி வரை தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளது.

மேலும் சவுத்ரி இந்த சம்பவம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் இமெயில்களை தங்களிடம் அளிக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+