கோவா பீச்சில் பிகினி பெண்களுக்கு தனி இடம் கூடாது... கூட்டமாகவே குளிக்க வேண்டும்: காங்கிரஸ் அடம்
பானாஜி: பிகினி அணிந்து குளிக்கும் பெண்களுக்காக கோவா கடற்கரையில் தனி இடம் ஒதுக்குவது அவர்களின் சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவா மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்துவருகிறது. சமீபத்தில் அந்த மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சுதின் தவலிகர் அளித்த பேட்டியில், கோவா கடற்கரையில் பிகினி எனப்படும் டூபீஸ் ஆடைகள் அணிந்து பெண்கள் குளிக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மினி ஸ்கர்ட் அணிந்து மது பார்களுக்கு செல்வது நமது கலாசாரம் கிடையாது என்றும் அவர் கூறினார்.

பிகினி பெண்களால் முகம் சுளிப்பு
கோவா அமைச்சர் கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த விவகாரம் அடங்கிப்போயிருந்தது. இந்நிலையில் கோவா சட்டசபை கூட்டத்தில் பேசிய மகாராஷ்டிரவாதி கோமன்டக் கட்சி எம்.எல்.ஏ லாவு மம்லேட்கர் "கோவா கடற்கரைக்கு குடும்பத்தோடு வருபவர்களுக்கு பிகினி பெண்களை பார்த்து முகம் சுளிக்கும் நிலை உள்ளது.

தனிமை பீச்சுகளை உருவாக்கலாமே...
பாலியல் தொல்லை அதிகரிக்கவும் இது வாய்ப்பளிக்கிறது. எனவே, பிகினி பெண்களுக்காக கோவா கடற்கரைகளில் சில பகுதியை ஒதுக்கி கொடுக்க வேண்டும். அங்கு குளிக்க ரூ.1000 முதல் ரூ.2000 வரை கட்டணமாக வசூலிக்கலாம். இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு, தனிமை காக்கப்படுவதோடு, அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கும்" என்றார்.

ஐயஹோ.. பெண்கள் சுதந்திரம் என்ன ஆவது?
ஆனால் இதையும் காங்கிரஸ் கட்சி எதிர்த்துள்ளது. அக்கட்சியின் கோவா மாநில செய்தித்தொடர்பாளர் துர்காதாஸ் காமத் நிருபர்களிடம் கூறியதாவது: இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதன் மூலமாக பெண்களின் சுதந்திரத்தை முடக்க சதி நடக்கிறது. பெண்களின் பாதுகாப்பை விட வருவாயை பெருக்கத்தான் கோவா அரசு இதுபோன்ற தனிமை கடற்கரைகளை உருவாக்க முயலுகிறது என்றார்.

ஜொள்ளர்கள் நிலை
பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு கோவா மாநிலத்தை இந்த பிகினியும், மினி ஸ்கர்ட் பிரச்சினையும் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது. பல ஜொள்ளர்கள் இலவச பிகினி காட்சிக்காகவே பஸ், ரயில் பிடித்து கோவா மாநிலத்துக்கு வந்து குவிகிறார்கள். அதனால் சுற்றுலா மேம்பட்டுள்ளது. பெண்களை தனியாக குளிக்க வைத்து பிழைப்பில் மண்ணை போட்டுவிடாதீர்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பல நிர்வாகிகள் கூறிவருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications