வேலையில்லாட்டி இப்படியெல்லாமா செய்வாங்க! வங்கிக் கணக்குகளை வாடகை விட்டு கமிஷன் பெறும் இளைஞர்கள்
பனாஜி: கோவாவில் வேலை இல்லாத பல இளைஞர்கள் தங்களது வங்கிக் கணக்குகளை இணைய மோசடி பேர் வழிகளுக்கு வாடகைக்கு கொடுத்து கூடுதல் பணம் சம்பாதித்து வருவது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
கோவாவில் வேலை இல்லாமல் பல இளைஞர்கள் கிடைத்த சிறிய சிறிய வேலைகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அது போன்ற வேலையில்லாத இளைஞர்களை சில மோசடி பேர்வழிகள் குறி வைத்து கூடுதல் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி இணைய மோசடி கும்பல் அவர்களை ஏமாற்றி வருகிறது.

அவர்களும் தங்களது வாழ்வாதாரத்திற்காக வங்கிக் கணக்குகளை இது போன்ற கும்பலுக்கு கொடுத்து பணம் சம்பாதிக்கிறார்கள். ரூ 1 லட்சம் மதிப்புள்ள ஒவ்வொரு வங்கி பரிவர்த்தனைக்கு அந்த மோசடி கும்பல் 1000 ரூபாயை கமிஷனாக வழங்கியதாம். காசோலை புத்தகம் உள்பட வங்கிக் கணக்கின் அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்கிறார்களா என்பதை அந்த மோசடி கும்பல் உறுதி செய்துக் கொள்கிறது.
சில நேரங்களில் மோசடி பேர் வழிகள் வங்கிக் கணக்கு வைத்திருப்பவரிடம் அவருடைய வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை அவர்களையே திரும்பப் பெறச் சொல்கிறார்கள். வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் தனது கமிஷனை எடுத்துவிட்டு மீதித் தொகையை மோசடியாளரிடம் வழங்குகிறார்கள்.
சியோலிம் பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசி ஒருவர் ரூ 45 லட்சத்தை ஆன்லைன் வர்த்தகத்தில் இழந்ததாக கொடுத்த புகாரை விசாரித்த போது 20 முதல் 25 வயதுக்குள்பட்ட பல இளைஞர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அந்த தொகை மாற்றப்பட்ட அதிர்ச்சிகரமான தகவல் வந்தது.
அந்த இளைஞர்களுக்கு தங்களது வங்கிக் கணக்கில் யார் பணத்தை டெபாசிட் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. எந்த இடத்திலிருந்து செய்கிறார்கள், மோசடி பணமா என்பது குறித்தும் எந்த தகவலும் தெரியாது. அது போல் ஒரு பெண் மருத்துவரிடம் ஷேர் மார்கெட்டில் முதலீடு செய்தால் அதிக வருமானத்தை தருவதாக கூறி ரூ 90 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
அதே போல் நகை வியாபாரி ஒருவரிடம் ரூ 2.5 கோடி அபேஸ் செய்யப்பட்டது. இந்த பணம் எல்லாம் இளைஞர்களின் வங்கிக் கணக்குகளுக்கு போடப்பட்டு பிறகு மோசடியாளர்கள் அவர்களது கமிஷனை கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.
இளைஞர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றாலும் மோசடிக்கு துணை போகிறார்கள் என்பதால் அவர்களும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள். எனவே யாரென்றே தெரியாதவர்களுக்கு வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை பகிர்வதை தவிர்த்துவிட வேண்டும்.
மோசடி நபர்கள் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் அவர்கள் இதுகுறித்து காவல் துறைக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications