நாசாவின் படத்தில் 'கடவுளின் கை' - விண்வெளி அதிசயத்தின் உண்மை என்ன? #factcheck
நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே வான் ஆய்வகத்தின் அலுவலபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு படம் வெளியிடப்பட்டிருந்தது. அந்தப்படத்தில் தங்கத்தால் ஆன கை போன்ற ஒரு மூட்டம் இருந்தது.
அது 'கடவுளின் கை' (Hand of God) என்று சமூக ஊடகத்தில் பலரும் கூறி வருகின்றனர். உண்மையில் அது என்ன?
விண்ணில் கை போன்ற உருவத்தில் தெரிவது என்ன?
கை போன்ற உருவத்தில் உள்ள அந்த ஒளி மூட்டம் என்ன என்பது குறித்தும் நாசா அந்த இன்ஸ்டாகிராம் பதிவிலேயே விளக்கமும் அளித்துள்ளது.
https://www.instagram.com/p/CUKsAqir5Bp/
விண்மீன் ஒன்று வெடித்து சிதறிய பின்பு உண்டான பல்சர் (துடிப்பு விண்மீன்) ஒன்றால் உருவான ஆற்றல் மற்றும் துகள்களின் மூட்டமே தங்க நிறத்தில் கை போன்ற உருவமாக தெரிகிறது என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
PSR B1509-58 என்று பெயரிடப்பட்ட இந்த துடிப்பு விண்மீன் பின் மூலம் சுமார் 19 கிலோ மீட்டர் குறுக்களவு (விட்டம்) கொண்டது என்றும் அது நொடிக்கு சுமார் ஏழு முறை சுழல்கிறது என்றும் நாசாவின் சந்திரா வானாய்வகம் தெரிவிக்கிறது.
பல்சர் - துடிப்பு விண்மீன் என்றால் என்ன?
ஒரு மிகப்பெரிய விண்மீன் அது மேலதிகமாக இயங்குவதற்கான எரிபொருள் இல்லாமல் சிதைவடையும் பொழுது நியூட்ரான் விண்மீன்கள் உருவாகும் என நாசாவின் அலுவல்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது.
- 'கடவுள் துகள்கள்' என்றால் என்ன? அப்பெயரை விஞ்ஞானிகள் தவிர்ப்பது ஏன்?
- ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் நடராஜர் சிலை உள்ளது ஏன்?
அந்த விண்மீனின் மையப்பகுதி சிதைவடைந்து அதில் இருக்கும் அனைத்து புரோட்டான்கள் (நேர் மின்மம் (positive charge) உடைய அணுவின் அடிப்படைத் துகள்கள்) மற்றும் எலக்ட்ரான்கள் (எதிர் மின்மம் (negative charge) உடைய அணுவின் அடிப்படைத் துகள்கள்) ஒன்றாக அழுத்தி நியூட்ரான்கள் (மின்மம் அற்ற (no charge)அணுவின் அடிப்படைத் துகள்கள்) ஆக மாற்றும்.
இதன் காரணமாக அவை நியூட்ரான் விண்மீன்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் நிறை (திணிவு) மிகவும் அதிகமாக இருக்கும். எந்த அளவுக்கு என்றால் பூமியின் நிறையைப் போல சுமார் ஐந்து லட்சம் மடங்கு அதிகமான நிறையை சுமார் 12 மைல் குறுக்களவுள்ள நியூட்ரான் விண்மீனில் அடைக்கப்பட்டிருக்கும் என்கிறது நாசா இணையதளம்.
பல நியூட்ரான் விண்மீன்கள் துடிப்பு விண்மீன்களாகவே அதாவது பல்சர்களாகவே காணப்படும்.
சீரான இடைவெளியில் கதிரியக்க துடிப்புகளை கொண்டுள்ள நியூட்ரான் விண்மீன்கள் பல்சர் (pulsar) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன.
இந்தத் துடிப்புகளுக்கு (pulses) இடையிலான கால இடைவெளி மில்லி நொடிகளிலிருந்து நொடிகள் வரை இருக்கும்.
துடிப்பு என்று பொருள்படும் 'pulse' எனும் ஆங்கிலச் சொல்லின் அடைப்படியிலேயே இவை 'pulsar' என்று பெயர்பெற்றன.
தங்க நிறத்தில் ஒளி வந்தது எப்படி?
துடிப்பு விண்மீன்களுக்கு காந்தப்புலம் மிகவும் அதிகமாக இருக்கும். இந்த காந்தப்புலத்தின் இரு துருவங்களில் இருந்தும் அதிக எண்ணிக்கையிலான துகள்கள் வேகமாக வெளியேற்றப்படும்.
காந்தப்புலத்தின் துருவங்களில் இருந்து அவ்வாறு அதிக வேகத்தில் வெளியேற்றப்படும் துகள்களால் மிகவும் சக்திவாய்ந்த ஒளிக்கீற்று உண்டாகும்.
அவ்வாறு உண்டாகியுள்ள ஒளிக்கீற்றுதான் தற்போது நாசாவால் வெளியிடப்பட்டுள்ள இந்த படத்திலும் தெரிகிறது.
பிற செய்திகள்:
- சீமானின் தாயார், சுப. வீரபாண்டியன், பத்திரிகையாளர்கள் குறித்து ஹெச். ராஜா சர்ச்சைப் பேச்சு
- பிரான்ஸ் அதிபர் மீது முட்டை வீச்சு: அதிபருக்கு காயமில்லை; முட்டை உடையவில்லை
- காசு போதவில்லை: கடன் வாங்கும் இந்திய அரசு - எத்தனை லட்சம் கோடி ரூபாய் தெரியுமா?
- SRH vs RR: வீணாய் போனது சஞ்சு சாம்சனின் அதிரடி; ராஜஸ்தானை வீழ்த்திய ஹைதராபாத்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?














Click it and Unblock the Notifications