எதிர்பார்க்கவில்லை.. எல்லையில் சீனாவிற்கு இந்தியா கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்.. தீவிரமாகும் பதற்றம்!
லடாக்: லடாக் அருகே இந்திய சீனா எல்லையில் பல இடங்களில் இந்தியா தனது ராணுவ கட்டுமான பணிகளை செய்து முடித்து இருக்கிறது. சீனா கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் தனது ராணுவ தளங்களை இந்தியா விரிவுபடுத்தி இருக்கிறது.
இந்தியா சீனா இடையிலான பதற்றம் தணிவது போல தெரியவில்லை. சீனா தொடர்ந்து லடாக் எல்லையில் அத்துமீறி வருகிறது. மே 5ம் தேதி சீனா சிக்கிம் எல்லையில் அத்து மீறியது. அப்போது தொடங்கிய பிரச்சனை தற்போது தீவிரம் அடைந்துள்ளது.
தற்போது சிக்கிமை விட லடாக் எல்லையில்தான் இரண்டு நாட்டு படைகள் வீரர்களை, ஆயுதங்களை அதிகமாக குவித்து வருகிறது. வரிசையாக தினமும் அதிக அளவில் போருக்கான ஆயத்தங்கள் அங்கே செய்யப்பட்டு வருகிறது.

போருக்கான ஆயத்தம்
சீனா தொடர்ந்து லடாக் எல்லையில் படைத்தளங்களை விரிவுபடுத்தி வருகிறது. முக்கியமாக விமான ரீதியான தாக்குதலுக்கு சீனா தயாராகி வருகிறது. விமான படைத்தளங்களை லடாக் அருகே சீனா ஏற்படுத்தி, அங்கு போர் விமானங்களை குவிக்க தொடங்கி உள்ளது. சீனாவின் இந்த செயல்கள் எல்லாம் தற்போது சாட்டிலைட் படங்கள் மூலம் அம்பலமாகி உள்ளது. தனியார் சாட்டிலைட் புகைப்படங்கள் பல இது தொடர்பாக வெளியாகி உள்ளது.

சீனா என்ன
சீனா எல்லையில் செய்த பெரிய காரியம் என்றால் அங்கிருக்கும் கரி குன்ஷா விமான படைத்தளத்தை விரிவாக்கியதுதான். விமான தாக்குதலுக்கு வசதியாக சீனா தனது விமான படைத்தளத்தை விரிவாக்கி உள்ளது. கரி குன்ஷா விமான நிலையம் அருகே இந்த விமான தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி சீனாவிற்கு சொந்தமான பகுதியாகும். பாங்காங் நதிக்கு அருகில்தான் இந்த விமான தளம் அமைக்கப்பட்டுள்ளது.

வெளியான சாட்டிலைட்
சாட்டிலைட் படங்கள் மூலம் இங்கு விமான படைத்தளம் விரிவாக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சீனா அங்கு விமானங்களை குவித்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிருந்துதான் கடந்த மே 5ம் தேதி சீன ஹெலிகாப்டர் லடாக் எல்லையில் அத்துமீறியது. அதன்பின் எல்லைக்கு அருகே மீண்டும் சீன விமானம் லடாக் அருகே வந்திருப்பது பெரிய அதிர்ச்சி அளித்துள்ளது. அதேபோல் இங்கு முகாம்களும் அமைக்கப்பட்டு வருகிறது.

சீனாவின் முகாம்கள்
அதன்படி இங்கு இருக்கும் பாங்காங் திசோ பகுதியில் சீனா தொடர்ந்து ரோந்து கப்பல்களை குவித்து வருகிறது. தற்போது அங்கு சீனாவின் 10 ரோந்து கப்பல்கள் நிற்கிறது. அதேபோல் சீனா இந்த பகுதியில் பங்கர் குழிகளை அமைத்து இருக்கிறது. மேலும் நவீன ரக ஆயுதங்களை சீனா தொடர்ந்து களமிறக்கி வருகிறது. ஆனால் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இந்தியா அமைதியாக இல்லை. சீனா கொஞ்சமும் எதிர்பார்க்காத அதிரடியை இந்தியா நிகழ்த்தி வருகிறது .

இந்தியா என்ன செய்தது
அதன்படி இந்தியா தொடர்ந்து லடாக் எல்லையில் தனது படைத்தளங்களை விரிவுபடுத்தி வருகிறது. பாங்காங் திசா லேக் பகுதியில் புதிய சிறிய விமான படைத்தளத்தை இந்தியா அமைத்துள்ளது. அங்கு புதிய ஹெலிகாப்டர் பேட்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதிக வீரர்களை களமிறக்கும் சின்னூக் வகை ஹெலிகாப்டர்களை களமிறக்க வசதியாக இந்தியா ஹெலிகாப்டர் தளங்களை அமைத்துள்ளது.

எல்லை முழுக்க
எல்லை முழுக்க புதியதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. வீரர்களை கொண்டு வரும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் லடாக்கில் கோக்ரா பகுதியில் ஒரே ஒரு ராணுவ தளம் மட்டுமே முன்பு இருந்தது. தற்போது அங்கு மூன்று தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. முக்கோணமாக மூன்று இடங்களில் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது முக்கியமான போர் வியூகமாக பார்க்கப்படுகிறது.

செம வேகம்
பாங்காங் திசோ பகுதியில் எப்படி சீனா ரோந்து கப்பல்களை இறக்கியதோ அதேபோல்தான் இந்தியாவும் ரோந்து கப்பல்களை இறக்கி உள்ளது. அங்கு முதற்கட்டமாக இந்தியா நான்கு ரோந்து கப்பல்களை இறக்கி உள்ளது. இந்த அனைத்திற்குமான சாட்டிலைட் புகைப்பட ஆதாரங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவின் வேகம்தான் சீனாவிற்கு ஷாக்கிங் சர்ப்ரைஸாக மாறியுள்ளது.

வெறும் 2 வாரம்
வெறும் இரண்டு வாரத்தில் இந்தியா இங்கு இத்தனை பணிகளையும் செய்து முடித்துள்ளது. god speed என்று சொல்லும் அளவிற்கு இரண்டு வாரத்தில் பணிகளை வேகமாக முடித்து இருக்கிறது. 2 வாரத்திற்கு முன் இருந்த சாட்டிலைட் புகைப்படத்திற்கும் இப்போது உள்ள புகைப்படத்திற்கும் நிறைய வேறுபாடுகள் தெரிகிறது. இந்தியாவின் இந்த அசாத்திய வேகத்தை சீனா கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை.

போர் வருமா
முக்கியமாக விமானங்களை இறக்குவதும், அதி நவீன ஆயுதங்களை களமிறக்குவதும் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாகும். இந்தியா அனைத்து பணிகளையும் சரியாக திட்டமிட்டு வருகிறது. முழு பிளானுடன் இந்தியா பணிகளை செய்து வருகிறது. அமைதியாக வேலைகள் நடக்கிறது என்று கூறுகிறார்கள். லடாக் எல்லையில் இதனால் போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்கிறார்கள்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications