பாலியல் சாமியார் ராம் ரஹீம் 20 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு!
20 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சாமியார் ராம் ரஹீம் சிங் மேல் முறையீடு செய்துள்ளார்.
சண்டிகர்: பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சாமியார் ராம் ரஹீம் சிங் தண்டனையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனாலும் சாமியார் குறித்த பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன.

சாமியார் ராம் ரஹீம் ஒரு செக்ஸ் அடிமை என்றும் தனது ஆசிரமத்தில் உள்ள ஆண் பெண் சீடர்கள் பேசிக் கொள்வதைக் கூட விரும்பாத அவர், பேசிக்கொள்ளும் சீடர்களுக்கு தண்டனை அளித்து வந்ததாகவும் அவரது முன்னாள் சீடர்கள் தெரிவித்தனர்.
பெண் சீடர்களை தனது இச்சைக்குப் பயன்படுத்திய சாமியார் ராம் ரஹிம் ஆண் சீடர்களை ஓரினச்சேர்க்கையாளராக மாற்றியதும் பலருக்கு ஆண்மை நீக்கம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
சிறையில் அடைக்கப்பட்ட சாமியார் நீரிழிவு நோயால் இரவில் தூங்க முடியாமல் அவதியடைந்து வருவதாக தகவல் வெளியானது. மேலும் செக்ஸ் அமையான அவரால் சிறையில் இருக்கமுடியவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் 20 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து ஹரியானா ஹைகோர்ட்டில் ராம் ரஹீம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications