வரதட்சணை ஒழிப்பு சட்டத்தின் கீழ் பெண் சாமியார் ராதே மா மீது வழக்கு
மும்பை: மும்பை அருகே வரதட்சணைக் கொடுமை தொடர்பாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பெண் சாமியார் ராதே மா உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையின் கண்டிவ்லி பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் தனது கணவர் குடும்பத்தார் தன்னை கூடுதல் வரதட்சணைக் கேட்டு கொடுமைப் படுத்துவதாக போலீசில் புகார் அளித்துள்ளார். அப்புகாரில் சார்ட்டட் அக்கவுண்டண்ட் ஆன தனது கணவர், அவரது குடும்பத்தாருடன் சேர்ந்து தன்னை உடல் ரீதியாக துன்புறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது கணவரும், அவரது குடும்பத்தாரும் தன்னைத் தானே சாமியார் எனக் கூறிக் கொள்ளும் பெண் சாமியார் ராதே மாவின் தீவிர பக்தர்கள் என்றும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார். இதனால், கணவர் குடும்பத்தாரோடு, பெண் சாமியார் ராதே மாவின் பெயரையும் அப்புகாரில் அவர் சேர்த்துள்ளார்.
திருமணத்தின் போது தனது பெற்றோர் ரூ. 1.25 கோடி மதிப்புள்ள நகைகளை வரதட்சணையாக தந்ததாகவும், அவற்றை தங்கள் வசம் வைத்துக் கொண்டே கூடுதல் வரதட்சணைக் கேட்டு கணவர் வீட்டார் துன்புறுத்துவதாகவும் அப்பெண் தெரிவித்துளார்.
இந்தப் புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால், இது தொடர்பாக நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார் அப்பெண்.
ஆனால், இந்தப் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடந்து வருவதாகவும், விசாரணைக்குப் பின்னரே குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என்றும் கண்டிவ்லியின் சீனியர் இன்ஸ்பெக்டர் பவார் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications