கூகுள்.காமின் “ஒரு நிமிட ஓனர்” சன்மய்க்கு ரூ.8.14 லட்சம் பரிசளித்து கவுரவித்த கூகுள் நிறுவனம்!
டெல்லி: கூகுள் வெப்சைட்டினை விலைக்கு வாங்கி ஒரு நிமிட உரிமையாளராய் இருந்த இந்தியர் ஒருவருக்கு 8.14 லட்ச ரூபாயை பரிசளித்துள்ளது அந்த நிறுவனம்.
சன்மய் வேத் என்கின்ற அந்த அமெரிக்க வாழ் இந்தியருக்கு ரூ. 4.07 லட்சத்தை கூகுள் நிறுவனம் பரிசளித்தது.
இந்நிலையில் அந்த பரிசுத் தொகையை சேவைப் பணிகளுக்கு அளிப்பதாக சன்மய் வேத் அறிவித்ததை அடுத்து அதை இரு மடங்காக ரூபாய் 8.14 லட்சமாக உயர்த்தி வழங்கியுள்ளது கூகுள்.

ஒரு நிமிட உரிமையாளர்:
இதுகுறித்து கூகுள் நிறுவனம், "சன்மய் வேத் என்ற இணைய ஆய்வாளர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூகுள் இணையதளத்தை விலைக்கு வாங்கி ஒரு நிமிடம் உரிமையாளராக இருந்தார்.

இரட்டிப்பு பரிசுத் தொகை:
இதையடுத்து அவருக்கு ரூபாய் 4.07 லட்சத்தை கூகுள் நிறுவனம் பரிசாக அறிவித்திருந்தது. அந்தத் தொகையை சேவைப் பணிகளுக்கு அளிக்க உள்ளதாக சன்மய் வேத் அறிவித்திருந்தார். எனவே, பரிசுத் தொகையை இரட்டிப்பாக வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் விற்பனைக்கு:
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான சன்மய் வேத் தற்போது அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இணையதள முகவரிகளை விலைக்கு வாங்குவது அவரது பொழுதுபோக்காகும். அவ்வாறு ஒருமுறை இணையதள முகவரிகளை விலைக்கு வாங்குவதற்காக இணையத்தில் தேடிக் கொண்டிருந்தபோது கூகுள் டாட் காம் விற்பனைக்கு என்ற தகவல் வந்தது.

பணம் கட்டிய சன்மய்:
முதலில் அவர் அதை நம்பவில்லை என்றபோதிலும் அந்தத் தகவல் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்ததால் சன்மய் வேத் கூகுள் டாட் காமை விலைக்கு வாங்குவதற்காக பணம் கட்டினார்.

பரிசளித்த நிறுவனம்:
கூகுள் டாட் காம் விலைக்கு வாங்கப்பட்ட ஒரு நிமிடத்துக்குள் அந்த நடவடிக்கையை கூகுள் நிறுவனம் ரத்து செய்தது. பிறகு அவ்வாறு தவறான அறிவிப்பு வெளியானதை சுட்டிக் காட்டியதற்காக சன்மய் வேதுக்கு பரிசளிப்பதாக அந்த நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications