பாலியல் வன்கொடுமைக்குள்ளாகும் பெண் ஊழியருக்கு ஊதியத்துடன் 3 மாத விடுப்பு: மத்திய அரசு
டெல்லி: பாலியல் வன்கொடுமைகளுக்குள்ளாகும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் 3 மாத விடுப்பு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அப்படி அளிக்கப்படும் விடுமுறை அந்த பெண் ஊழியரின் ஆண்டு விடுமுறை கணக்கில் இருந்து கழிக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. சிறுமிகளும் கணிசமான அளவில் பலாத்காரத்துக்குள்ளாகின்ற கொடுமை நடைபெறுகிறது.

இதுபோன்ற சூழலில் பாதிக்கப்படும் பெண்கள் மன உளைச்சல் அடைந்து சில நேரங்களில் தற்கொலைக்கும் முயற்சிக்கின்றனர்.
வேலைக்குச் செல்லும் பெண்கள், பணியிடங்களில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டால், அவர்களது நிலைமை பரிதாபமான நிலைக்குத் தள்ளப்படுகிறது. இந்த நிலையை மாற்ற, மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
இதன்படி பணிக்குச் செல்லும் பெண்கள், பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டால், அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 3 மாத விடுமுறை வழங்கப்பட வேண்டும் என பணியாளர் மற்றும் பயிற்சித் துறை உத்தரவிட்டுள்ளது.
அப்படி அளிக்கப்படும் விடுமுறை அந்த பெண் ஊழியரின் ஆண்டு விடுமுறை கணக்கில் இருந்து கழிக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications