சொந்த வீடு.. கார்.. பைக் இருக்கா?- அப்போ மத்திய அரசே உங்க கேஸ் மானியத்தை “கட்” செய்யப் போகுதாம்!
டெல்லி: சொந்த வீடு, கார், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு மானியத்தை தாமாகவே நிறுத்திவிடலாம் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு மானியம் இப்போது நுகர்வோரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆண்டு ஒன்றுக்கு 12 சிலிண்டர்கள் மட்டும் மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், வசதிப்படைத்தவர்கள் மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

இதனை ஏற்று இதுவரை சுமார் 42 லட்சம் பேர் மானியம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சொந்த வீடு, கார் வைத்திருப்பவர்களுக்கு தாங்களே நிறுத்திவிட மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாம். டெல்லியில் நிதி அமைச்சகம் ஏற்பாடு செய்த பொருளாளதார கருத்தரங்கம் ஒன்றில் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதனை சூசகமாக வெளியிட்டுள்ளார்.
குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு மானிய விலையில் சமையல் சிலிண்டர் வழங்கத் தேவையில்லை. இதற்கான நிர்வாக முடிவை எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது. இந்த முடிவால் நலிவடைந்தவர்களுக்கு நம்மால் உதவ முடியும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மானியம் ரத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே திட்டத்தை முந்திய காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி முன்வைத்தார். ஆனால் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பையடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் தனி பெரும்பான்மையுடன் உள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் குறியாக உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications