கண்ணீர் விட வைக்கும் வெங்காயம்: இறக்குமதி விதிகளை தளர்த்திய மத்திய அரசு
டெல்லி: வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்வதற்கான விதிகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவாக வட மாநிலங்களில் கிலோ நூறு ரூபாய்க்கு விற்பனையாகிறது. வட இந்தியாவில் பெய்து வரும் மழை காரணமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதும், வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்பதும், விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

விதிமுறைகளில் தளர்வு
இதனிடையே, பாகிஸ்தான், ஈரான், சீனா, எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் ஒப்பந்த புள்ளிகளை, தேசிய வேளாண்மைக் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக இறக்குமதி விதிமுறைகளில் சில அம்சங்கள் தளர்த்தப்பட்டுள்ளன.
3 வாரங்களுக்கு
வெங்காய விலை உயர்வு பற்றி பேசிய மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார், இன்னும் மூன்று வாரங்களுக்கு வெங்காய விலை உயர்ந்தே இருக்கும் என்று கூறியுள்ளார். வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சரத்பவார் கூறினார்.
ஆலோசனைக்கூட்டம்
இதற்கிடையே, விலை உயர்வு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த வெங்காய விளைச்சல் அதிகமாக உள்ள ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்களின் வேளாண்துறை செயலர்களின் கூட்டத்தை மத்திய அரசு நாளை டெல்லியில் நடத்துகிறது. இதில், வெங்காய உற்பத்தியை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications