தமிழகத்தில் அடுத்தடுத்த பரபரப்பு... உள்துறை அமைச்சருடன் ஆளுநர் ஆலோசனை
தமிழகத்தில் அடுத்தடுத்த பரபரப்பு ஏற்பட்டு வரும் நிலையில் உள்துறை அமைச்சருடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
முதல்வருக்கு எதிராக ஆளுநரை சந்தித்ததற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்காததால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த பரபரப்பான சூழலில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வரவுள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே ஆளுநர் வித்யாசாகர் ராவ் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறினாலும் தமிழக அரசியல் சூழல் குறித்து விவாதிக்கலாம் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications