For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைக்க இடமில்லையாம்.. நாணயங்கள் தயாரிப்பை நிறுத்த ஆலைகளுக்கு மத்திய அரசு உத்தரவு!

ஏற்கனவே தயாரித்துள்ள நாணயங்களை வைக்க இடமில்லை என்பதால் புதிதாக நாணயங்களை தயாரிக்க வேண்டாம் என ஆலைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நாணய உற்பத்தியை நிறுத்த ஆலைகளுக்கு மத்திய அரசு உத்தரவு- வீடியோ

    கொல்கத்தா: ஏற்கனவே தயாரித்துள்ள நாணயங்களை வைக்க இடமில்லை என்பதால் புதிதாக நாணயங்களை தயாரிக்க வேண்டாம் என ஆலைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    நாட்டில் ரூபாய் நோட்டுக்கள் மட்டுமின்றி ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகிறது.

    கொல்கத்தா, மும்பை, நொய்டா மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் மத்திய அரசின் ஆலைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் நாணயங்களை தயாரித்து வருகின்றன.

    நிரம்பி வழியும் நாணயங்கள்

    நிரம்பி வழியும் நாணயங்கள்

    இந்நிலையில் ஏற்கனவே தயாரித்த நாணயங்கள் ஆலைகளில் உள்ள அறைகளில் நிரம்பி வழிகின்றன. இதனால் புதிய நாணயங்களை தயாரித்தால் அவற்றை வைக்க இடமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    நாணய தயாரிப்புக்கு தடை

    நாணய தயாரிப்புக்கு தடை

    இதன்காரணமாக புதிதாக நாணயங்களை தயாரிக்க மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஓவர் டைம் வேண்டாம்

    ஓவர் டைம் வேண்டாம்

    வழக்கமான பணி நேரத்தில் ஆலை ஊழியர்கள் பணி செய்தால் போதும் என்றும் ஓவர்டைம் பார்க்க வேண்டாம் என்றும் மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    வங்கிகளில் இடமில்லை

    வங்கிகளில் இடமில்லை

    நாணய உற்பத்தியின் அளவீடு, அவ்வப்போது சுழற்சி மற்றும் இருப்பு வைப்பதற்கான இடத்தை பொருத்து இருக்கும் என தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி நாணயங்களை தற்போது, நாணயங்களை சேமித்து வைக்க வங்கிகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியுடன் எந்த இடமும் இல்லை என தெரிவித்துள்ளது.

    பழைய ரூபாய் நோட்டுகள்

    பழைய ரூபாய் நோட்டுகள்

    மார்க்கெட்டில் புழக்கத்தில் விட ஆலைகளில் இருந்து ரிசர்வ் வங்கி நாணயங்களை எடுத்து செல்லும். ஆனால் தற்போது வங்கிகள் தங்களின் நாணயங்கள் வைப்பதற்கான இடத்தில் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்துள்ளதால் நாணயங்களை வைக்க இடமில்லை என தெரிவித்துள்ளன.

    2528 மில்லியன் காய்ன்ஸ் தேக்கம்

    2528 மில்லியன் காய்ன்ஸ் தேக்கம்

    ஜனவரி 8ஆம் தேதி 2018ஆம் ஆண்டின்படி ஆலைகளில் 2528 மில்லியஙன நாணயங்கள் தேக்கத்தில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் பாதிக்கும் என தெரிகிறது.

    தொழிலாளர்கள் போராட்டம்

    தொழிலாளர்கள் போராட்டம்

    மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து கொல்கத்தா ஆலையில் உள்ள 1400 தொழிலாளர்கள் கடந்த 8ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The four government mints in Kolkata, Mumbai, Noida and Hyderabad have stopped production of coins as lack of storage space.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X