5 கிலோ கியாஸ் சிலிண்டர்களை ஷாப்பிங் மால், குடிசை பகுதிகளில் விற்க முடிவு

5 கிலோ எடை கொண்ட சிறிய சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் புதிய திட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் 5-ந்தேதி மத்திய அரசு அமல்படுத்தியது.
இந்திய எண்ணை நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பெட்ரோல் பங்குகளில் 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
5 கிலோ சமையல் கேஸ் சிலிண்டர்கள் நாடெங்கும் நல்ல ஆதரவை பெற்றுள்ளது. குறிப்பாக மாணவர்கள், ஐ.டி. மற்றும் பி.பி.ஓ.க்களில் பணி புரிபவர்களுக்கு 5 கிலோ கியாஸ் திட்டம் மிகவும் உதவியாக உள்ளது. அதோடு சமீப காலமாக 5 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கான தேவை அதிகரித்து வருகிறது.
டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் காரணமாக தற்போதுதான் 5 கிலோ கேஸ் சிலிண்டர்கள் விற்பனை தொடங்கி உள்ளது.
இதற்கிடையே 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாக பெட்ரோலியம் அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த திட்டத்தின்படி ஷாப்பிங் மால்களிலும் 5 கிலோ சிலிண்டர் விற்பனை நடைமுறைக்கு வர உள்ளது.
மேலும் குடிசைப் பகுதிகளிலும் 5 கிலோ சமையல் சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்யப்பட உள்ளது. இதன்மூலம் குடிசைப்பகுதி மக்கள் கள்ளச்சந்தையில் அதிக விலை கொடுத்து சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வாங்குவதை கட்டுப்படுத்த முடியும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications