பொறுமை, நேரம் தவறாமையை பின்பற்றினேன்: ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி சதாசிவம்
டெல்லி: எனது பணியின்போது பொறுமை, நேரம் தவறாமையை பின்பற்றினேன்... நீதித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கூறியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த பி.சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து சனிக்கிழமையுடன் ஓய்வு பெற்றார். அவருக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பிரிவுபசார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அந் நிகழ்ச்சியில் பி.சதாசிவம் பேசியதாவது:
உச்சநீதிமன்றத்தில் பணியாற்ற எனக்கு கிடைத்த வாய்ப்பைக் கவுரமாக கருதுகிறேன். சமூகச் சிந்தனைகள் மாறிவிட்டன, சட்டங்களும் மாறி வருகின்றன. அதற்கு ஏற்ப நீதித்துறை தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.
வழக்குகள் தேக்கம்
நான் பொறுப்பேற்ற போது, 67,964 வழக்குகள் தேங்கி இருந்தன. தற்போது, 63,500 வழக்குகள் மட்டுமே உள்ளன.
மனசாட்சிக்கு நேர்மை
நீதிமன்றத்தின் தீர்ப்புகள் நம் தேசத்தை பிரதிபலிக்க வேண்டும். நீதிபதிகள் அரசியல் சாசனத்துக்கும், மனசாட்சிக்கும் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
நிதி பற்றாக்குறை
நீதித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை. அதை உயர்த்தி வழங்க வேண்டும்.
இவ்வாறு சதாசிவம் பேசினார்.
சதாசிவத்திற்கு பாராட்டு
அடுத்த தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள ஆர்.எம்.லோதா பேசுகையில், "சதாசிவத்தின் எளிமை, அனைவரிடமும் நட்பாக பழகும் தன்மை, காலியிடங்களை நிரப்பிய பணி ஆகியவை பாராட்டுக்குரியவை. நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை இந்த நிகழ்ச்சியில் பேசுவது பொருத்தமற்றது.
உச்ச நீதிமன்றத்துக்கு ஜாதி, மதம், சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதம் இல்லை. அரசியல் சாசனத்தின்படி, நடுநிலையோடு நீதிமன்றம் செயல்பட பாடுபடுவேன்," என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications