கல்புர்கியைக் கொலை செய்த அதே பாணியில் கொல்லப்பட்ட கெளரி லங்கேஷ்!
Recommended Video

பெங்களூர்: பிரபல சித்தாந்தவாதி எம்எம் கல்புர்கி கொலை செய்யப்பட்ட அதே பாணியில் லங்கேஷ் பத்திரிகை ஆசிரியர் கெளரி லங்கேஷும் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் உள்ள ராஜராஜேஷ்வரி நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டார் கெளரி. மிகக் கோரமான படுகொலை இது. இன்று மாலை 6.30 மணியளவில் நடந்த இந்த கோழைத்தனமான படுகொலைச் சம்பவம், மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலையாளிகள் மின்னல் வேகத்தில் தப்பி விட்டனர். சுடப்பட்ட சிறிது நேரத்திலேயே கெளரி உயிரிழந்து விட்டார். வெளியே போய் விட்டு வீட்டுக்குத் திரும்பிய கெளரி, காரை விட்டு இறங்கி வீட்டு கேட்டை திறந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சரமாரியாக சுட்டனர். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர் பி.லங்கேஷின் மகள்தான் கெளரி. கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த பத்திரிகையாளராக விளங்கியவர் லங்கேஷ்.
2 ஆண்டுகளுக்கு முன்பு சித்தாந்தவாதி கல்புர்கி எப்படிக் கொல்லப்பட்டாரோ அதேபோலத்தான் இப்போது கெளரியும் கொல்லப்பட்டுள்ளார்.
மத அமைப்பினரின் மிரட்டலுக்குள்ளாகி வந்தவர் கெளரி. அவர்களிடமிருந்து இவருக்கு மிரட்டல்களும் இருந்து வந்தன. கடந்த ஆண்டு இவர் மீது அவதூறு வழக்குகளும் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை பாஜகவினர்தான் தாக்கல் செய்திருந்தனர். அப்போது பாஜகவினர் என்னை சிறையிலேயே வைத்துப் பார்க்க ஆசைப்படுகின்றனர் என்று கூறியிருந்தார் கெளரி.
இந்த நிலையில்தான் இன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் கெளரி.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications