ஜார்க்கண்ட்டில் தேர்தலுக்குப் பின்னர் "கூட்டணி" ஆட்சி: லாலு கருத்து
ஹூசைனாபாத்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் மெகா கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தனித்துப் போட்டியிடுகிறது, காங்கிரஸ், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

முதல் கட்ட தேர்தல் நவம்பர் 25-ந் தேதியன்று 13 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இவை அனைத்துமே மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைய பகுதியாகும். இந்த தொகுதிகளில் தற்போது தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பலாமோவ் மாவட்டத்தில் ஹூசைனாபாத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் லாலு பிரசாத் யாதவ். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தலுக்குப் பின்னர் பீகாரில் இருப்பதைப் போல மெகா கூட்டணி ஆட்சிதான் அமையும். என்று கூறினார்.
இதனால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ்- ராஷ்டிரிய ஜனதா தளம் இணைந்த ஒரு கூட்டணி அரசு ஜார்க்கண்ட்டில் அமைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications