எனது பாட்டி மாதிரியான பெண்கள் தலைமைப் பொறுப்பிற்கு வர வேண்டும்: ராகுல் விருப்பம்
போபால்: பெண்களே நாட்டின் முன்னேற்ற சக்தி, எனவே, எனது பாட்டி (இந்திரா காந்தி ) போன்ற சக்தி படைத்தப் பெண்கள் தலைமைப் பொறுப்பிற்கு வர வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தேர்தல் பிரச்சாரத் தலைவருமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ‘மகளிர் சந்திப்பு' நிகழ்ச்சி நடை பெற்றது. அந்தக் கூட்டத்தில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தங்கள் கட்சியின் சார்பில் வெளியிடப்பட உள்ள தேர்தல் அறிக்கையில் மகளிருக்காக எத்தகைய திட்டங்களை சேர்க்கலாம் என்பது குறித்து விவாதிக்கப் பட்டது.
அப்போது, பெண்கள் மத்தியில் பேசிய காங்கிரஸ் கட்சி பொதுசெயலாளரும், தேர்தல் பிரசாரக்குழு தலைவருமான ராகுல்காந்தி, ‘பெண்களே நாட்டின் முன்னேற்ற சக்தி' எனப் பாராட்டினார்.
மேலும், கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

பாட்டி தான் பாஸ்....
எங்கள் இல்ல தலைவியாக எனது பாட்டி இந்திரா காந்தி தான் செயல்பட்டார். எங்கள் குடும்பத்தில் எனது தந்தை ராஜீவ்காந்தியும், சித்தப்பா சஞ்சய்காந்தியும் இருந்த போதிலும் எல்லா பொறுப்பையும் பாட்டியே பார்த்துக் கொண்டிருந்தார்.

சிறந்த நிர்வாகி....
அவரின் கீழ் தான் எங்கள் குடும்ப நிர்வாகம் நடைபெற்றது. அந்தளவுக்கு அவருக்கு மிகுந்த சக்தி இருந்ததாலேயே குடும்பத்தையும் நாட்டையும் அவர் சிறப்பாக நடத்தி வந்தார்.

பாட்டி போன்ற பெண்கள்....
ஆகையால் எனது பாட்டியை போன்று சக்தி கொண்ட பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டும். அவர்களை போன்றவர்கள் தான் காங்கிரஸ் கட்சி நடைபெற உள்ள தேர்தலில் எளிதாக வெற்றி பெற முடியும்.

50% பெண்கள்....
அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளில், காங்கிரஸ் அமைச்சரவை மற்றும் கட்சி பொறுப்புகளில் 50 சதவிகித அளவுக்கு பெண்களின் பங்கு இருக்கும் என கூறப்படுகிறது.

பெண்கள் சக்தி....
நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக பெண்கள் உள்ளபோது அவர்களின் சக்தியை முறையாக பயன்படுத்த முன்வரவேண்டும்.

வல்லரசாக வாய்ப்பு....
அவ்வாறு பயன்படுத்த முன்வராவிட்டால் இறுதி வரை இந்தியா, வல்லரசு நாடாக மாற வாய்ப்பு கிடையாது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ள்ளார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications