பாகுபலி-2 படத்தின் 9 நிமிட காட்சிளை லீக் செய்த கிராபிக் டிசைனர் கைது
'பாகுபலி 2' படத்தின் 9 நிமிட காட்சிகளை இணையத்தில் வெளியிட்டதாக கிராபிக் டிசைனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்: ராஜமெளலி இயக்கத்தில் பெரும் பொருட் செலவில் உருவாகி வரும் 'பாகுபலி 2' படத்தில் சில சண்டைக்காட்சிகள் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியில் இருக்கிறது.
ராஜமெளலி இயக்கத்தில் பாகுபலி திரைப்படத்தின் அடுத்த பாகம் தயார் ஆகிவருகிறது. இத்திரைப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, சத்யராஜ், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கின்றார். இரண்டாம் பாகத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் யாரும் எதிராபாரத விதமாக, 'பாகுபலி 2' படத்தின் 9 நிமிட சண்டைக் காட்சிகளில் ஒரு பகுதி இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். இதில் பிரபாஸ், அனுஷ்கா இருவரும் சில எதிரி நாட்டு போர் வீரர்களுடன் வாக்குவாதம் செய்வது போலவும், அதனைத் தொடர்ந்து சண்டைத் தொடங்குவது போன்று அக்காட்சிகள் அமைந்திருக்கின்றன. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனை தொடர்ந்து படக்குழுவினர் நடத்திய விசாரணையில்,கிராபிக்ஸ் கோர்வைக்காக ஹைதராபாத்தில் உள்ள அன்னப்பூர்னா ஸ்டியோவில் கொடுக்கப்பட்ட 9 நிமிட காட்சிகளில்,5 நிமிட காட்சிகள்தான் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது என்பதை கண்டறிந்தனர்.இதனை தொடர்ந்து அன்னப்பூர்னா ஸ்டியோவுக்கு சென்ற படக்குழுவினர்,அந்த காட்சிகளை வெளியிட்டது பயிற்சி கிராபிக் டிசைனராக பணிபுரியும் கிருஷ்ண தயானந்த் என்பவர்தான் என்பதையும் கண்டறிந்தனர்.

இது தொடர்பாக தயாரிப்பாளர் அளித்த புகாரின் பேரில், ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் கிருஷ்ண தயானந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications