யார் இந்த கலீம் முல்லா கான்.. ஒரே மரத்தில் சச்சின், ஐஸ்வர்யா.. 300 வெரைட்டி.. ஆச்சரிய மாம்பழ மனிதர்
ஒரே மரத்தில் 300 வகையான மாம்பழங்களை உருவாக்கி உள்ளார் கலீம் முல்லா கான்
கான்பூர்: யார் இந்த கலீம் முல்லா கான் என்று வியக்கும் அளவுக்கு, இவரது புகழ் பாடி கொண்டிருக்கிறது உத்தரபிரதேசம்.. மாம்பழ மனிதன் என்று அழைக்கப்படும் இந்த மேங்கோ மேன் யார்?
வடமாநிலங்களிலேயே மாம்பழத்துக்கு பெயர் பெற்றது உத்தரப்பிரதேசத்தின் மலிகாபாத் பகுதிதான்.. நம்ம ஊர் சேலம்போலவே, புகழ் வாய்ந்தது இந்த மலிகாபாத் மாம்பழம்..
உத்திரப்பிரதேச மாநிலத்தில், தலைநகரான லக்னோவிற்கு அருகில் உள்ள நர்சரியில், மிகப்பெரிய வித்தியாசமான இந்த மாம்பழ மரம் உள்ளது. இந்த மரத்தை உற்று பார்த்தால், வித்தியாசமாக தெரியும்..

ஓவல் ஷேப்
சாதாரண மாம்பழ மரம் போன்று இருக்காது.. இதன் ஒவ்வொரு கிளையும், வித்தியாசமான பச்சை கலரில் காணப்படும்.. அதேபோல, மாம்பழங்களும் ஒவ்வொரு கலரில், ஒவ்வொரு வடிவத்தில் பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு, ஊதா கலரில் இருக்கும்.. அதன் வடிவமும் மாறுபட்டிருக்கும்.. வட்டவடிவம், ஓவல் வடிவங்களில் காய்த்து தொங்கும்.. இப்படி மொத்தம் 300 வகையான மாம்பழங்களை இம்மரம் தந்து கொண்டிருக்கிறது.

கலீம் உல்லா கான்
இந்த மரத்தை பராமரித்து வருபவர் பெயர் கலீம் உல்லா கான்.. மலிகாபாத்தை சேர்ந்தவர் இவர்.. இவரது மரம் 120 வருட பழமையானதும்கூட.. இந்த மரத்தில்தான் 300 வகையான மாம்பழங்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளார் மாலிக்.. கல்வி கற்க முடியாத சூழலில், உல்லா கான், சொந்த உழைப்பை தன் தோட்டத்திலேயே கையில் எடுத்தார்.. இந்த மாமரத்தோடு ஒட்டவைத்து, பதியம் போட்டு பரிசோதனை செய்து பார்த்தார்... ஒவ்வொரு முறையும் வித்தியாசமான மாம்பழங்கள் கிடைத்தன.. இதுவே அவருக்கு ஆர்வத்தை தூண்டி உள்ளது.

பழத்தோட்டம்
இதுகுறித்து கலிம் முல்லா கான் சொல்லும்போது,"பார்ப்பதற்கு சாதாரணமாக தோன்றும்.. ஆனால், இது வெறும் மரமல்ல.. பழத்தோட்டம், நான் சின்ன வயதிலேயே பலவகையான மாம்பழங்களை உருவாக்க முயற்சி செய்தேன்... இதற்காக மாமரங்களை ஒட்டுவித்தல், ஹெபிரிட் உருவாக்குதல் போன்ற முயற்சிகளில் எனக்கு பலன் கிடைத்தது.. விதவிதமான இந்த மாம்பழங்களுக்கு ஒவ்வொரு பெயரை தனித்தனியாக வைத்தேன்.

கைரேகை
இந்த 300 பழங்களும் சுவை மிகுந்தன.. ஆனால், வித்தியாசமானவை.. எப்படி மனிதர்களுக்கு மனிதர் கைரேகை வித்தியாசப்படுகிறதோ, அதுபோல, இதன் சுவையும் வித்தியாசப்படும்.. மேலும், நிறம், மணம், தோற்றம் இவைகளிலைகூட வித்தியாசமானவை.. ஒரு மாமரத்துக்கு ஐஸ்வர்யாராய் என்று பெயர்சூட்டினேன். அதேபோல, பிரதமர் மோடியை பெருமைப்படுத்தும் வகையில் ஒரு வகையான மாம்பழத்துக்கு நமோ என்ற பெயரும், சச்சின் டெண்டுல்கர் பெயரை ஒரு மாம்பழத்துக்கும் வைத்துள்ளேன்..

நர்கீஸ் தத்
நடிகை நர்கீஸ் தத், முகல்-இ-அசாம், படத்தில் நடித்த பிரபல கேரக்டர் அனார்கலி பெயரை ஒரு மாம்பழத்துக்கு சூட்டி உள்ளேன்.. அதேபோல, மாதுளை மணம் வரும் மாம்பழம் என வித்தியாசமான மாம்பழங்களை உருவாக்கியிருக்கிறேன்... மரங்களை பொறுத்தவரை வாழ்க்கைக்கு இன்றியமையாதவை.. மனித குலம் மறைவுக்கு பின்னரும், மரங்கள் நின்று வாழக்கூடியவை என்றார்..

மரக்கிளைகள்
கடந்த 2008ம் ஆண்டு கலீம் உல்லா கானுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது... ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளும் கலீம் உல்லா கானை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து பெருமைப்படுத்தியுள்ளன.. இந்த விருதுகள் எல்லாம் கானின் உழைப்பால் கிடைத்தவை.. 15 வயதில் இருந்து தன் ஆராய்ச்சியை துவங்கி உள்ளார். மாம்பழ மரக்கிளைகளை வெட்டியும், ஒவ்வொரு மரத்திலிருந்து பிரித்தெடுத்தும் முயற்சி செய்து வந்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications