Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுடுகாட்டில் பரபரப்பு.. எரிந்து கொண்டிருந்த அப்பாவின் சடலம்.. ஓடிப்போய் உள்ளே குதித்த மகள்..!

தந்தையின் சடலம் எரிந்து கொண்டிருந்தபோது அதில் விழுந்தார் மகள்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: அப்பாவின் சடலம் தீயில் எரிந்து கொண்டிருந்தபோது, திடீரென அதே தீயில் குதித்துவிட்டார் அவரது மகள்.. இப்படி ஒரு பரபரப்பான சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.

தேசம் முழுவதும் தொற்று பரவி கொண்டிருக்கிறது.. பலரும் இறந்து கொண்டிருக்கின்றனர்.. ஒருநாளைக்கு ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன..

தொற்றால் இறந்தவர்கள் ஒரு சோகம் என்றால், இறந்தவர்களை பறிகொடுத்துவிட்டு, உறவினர்கள் படும் பாடு அதற்கு மேல் சோகத்தை கிளப்பி கொண்டிருக்கிறது.

சிகிச்சை

சிகிச்சை

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தை சேர்ந்தவர் தாமோதர்தாஸ் ஷார்தா.. இவருக்கு 73 வயதாகிறது.. இவருக்கு 3 மகள்கள் இருக்கிறார்கள்.. இந்நிலையில், ஷார்தாவுக்கு திடீரென தொற்று பாதிப்பு ஏற்பட்டது.. அதனால் அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் தீவிரமான சிகிச்சை எடுத்து வந்தார்..

சடலம்

சடலம்

ஆனால், நேற்று அவர் இறந்துவிட்டார்.. இதையடுத்து, சடலத்தை எரிக்க ஏற்பாடு நடந்தது. சடலத்தை ஒரு இடத்தில் வைத்து, தீ மூட்டப்பட்டது.. அப்போது, 3 மகள்களில் ஒருவரான சந்திரா ஷார்தா என்பவர் ஓடிப்போய் அதே தீயில் குதித்துவிட்டார்.. இதனால் அங்கிருந்தோர் பதறிப்போய்விட்டனர்.

தீக்காயம்

தீக்காயம்

இதையடுத்து, அனைவரும் ஓடிச்சென்று, தீயில் குதித்த மகளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. ஆனால், அதற்குள் அந்த பெண்ணுக்கு 70 சதவீதம் உடம்பெல்லாம் தீக்காயம் ஏற்பட்டு விட்டது.. பக்கத்திலேயே ஒரு ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்லப்பட்டது.. ஆனால், ஜோத்பூர் ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்து சென்றுவிடும்படி சொல்லிவிட்டார்கள்.. அதன்படியே, அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையும் நடந்து வருகிறது.

பாசம்

பாசம்

தீயில் குதித்தவர் இறந்து போனவரின் 3வது மகளாம்.. அவர்தான் வீட்டுக்கு கடைசி பெண்... அப்பா மீது அளவுகடந்த பாசத்தை வைத்திருந்தவர்.. இவர்களின் அம்மா இறந்து கொஞ்ச நாள்தான் ஆகிறதாம்.. நடந்த சம்பவம் தொடர்பாக கோட்வாலி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்... கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் ஷார்தாவுக்கு தொற்று உறுதிப்பட்டுள்ளது.. அதற்குள் செவ்வாய்க்கிழமையே இறந்துவிட்டார்..

சுடுகாடு

சுடுகாடு

பொதுவாக, சடலங்களை எரிக்கும் இடங்களில் பெண்கள் யாரையும் அனுமதிக்க மாட்டார்கள்..ஆனால், அப்பாவை தகனம் செய்யும்போது, அங்கு வரவேண்டும் என்று இளைய மகள் அனுமதி வாங்கி கொண்டுதான் வந்துள்ளார்.. அப்பாவின் உடல் எரிய தொடங்கியதுமே, அதை அவரால் பார்க்க சகிக்க முடியாமல், அதே தீயில் விழுந்துவிட்டார்.

 உடன்கட்டை

உடன்கட்டை

அன்றைய காலங்களில் "உடன்கட்டை ஏறுதல்" என்ற ஒரு விஷயம் இருந்தது.. கணவன் இறந்த பிறகு மனைவியும் அதே தீயில் இறந்துவிடும் இந்த நடைமுறைக்கு "சதி" என்றும் பெயர்.. இதை ராஜாராம் மோகன் ராய் ஒழித்து விட்டார்.. ஆனால், இதை அடிப்படையாக வைத்து, "பாரதி கண்ணம்மா" என்ற படம் வெளிவந்தது.. மீனா இறந்ததும் பார்த்திபன் அப்படித்தான் காதலுக்காக, அதே தீயில் ஓடிப்போய் விழுந்து உடன்கட்டை ஏறிவிடுவார்.. இந்த ஜெய்ப்பூர் சம்பவத்தை உடன்கட்டை என்று சொல்லிவிட முடியாது.. ஆனால், தீயில் எரிந்து சாம்பலாகி போகும் அளவுக்கு பீறிட்டு வெடித்து கொண்டு வருகிறது இந்த பாழும் "பாசம்"!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+