ஓ மை காட்.. சம்மந்திகள் காதலித்து ஓட்டம்.. மணமகளின் தாயாரை இழுத்து கொண்டு ஓடிய மணமகனின் தந்தை!
சூரத் தொழிலதிபர், சம்மந்தியுடன் தலைமறைவாகி உள்ளார்
Recommended Video
காந்திநகர்: புத்தி கெட்டுப் போச்சு.. ஜோடி மாறிப்போச்சு.. ஊரை விட்டு ஓடிப்போச்சு.. கடைசியில் குடும்பமே நாறிப்போறிச்சு.. அப்படித்தான் ஒரு சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது!
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் துணிக்கடை வைத்திருக்கும் தொழிலதிபர் பிரசாந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெரிய தொழிலதிபர்.. அந்த பகுதியில் ரொம்பவும் பிரபலம்... பல ஆண்டுகளாக அங்குதான் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன்.
கல்யாண வயதுள்ள மகனுக்கு பிரசாந்த், அதே பகுதியை சேர்ந்த வைர கைவினைஞர் ஒருவரின் பெண்ணை கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்தார்... இதற்காக இரு வீட்டு தரப்பிலும் உட்கார்ந்து பேசினர்.. மணமக்களுக்கு இந்த கல்யாணத்தில் பரிபூரண சம்மதம்.. அதனால் பிப்ரவரி மாதம் இவர்களின் கல்யாணத்துக்கு நாள் குறிக்கப்பட்டது.. இதற்கான வேலைகள் ஜரூராக ஏற்பாடாகின.

கல்யாண ஏற்பாடுகள்
அந்த ஊரிலேயே பெரிய வீடுகள் என்பதால் இரு வீட்டிலுமே கல்யாணத்தை சிறப்பாக நடத்த முடிவு செய்தனர்.. அதற்காக இரு வீட்டு பெரியவர்களும் அடிக்கடி சந்தித்து, கல்யாண ஏற்பாடுகள் பற்றி டிஸ்கஸ் செய்து வந்தனர். இப்படி ஒரு டிஸ்கஷன் நடக்கும்போதுதான், பிரசாந்துக்கும், வைர கைவினைஞரின் மனைவிக்கும் இடையே காதல் பற்றிக் கொண்டது.. ரொம்ப தீவிரமாக டிஸ்கஷன் நடந்திருக்கும்போல தெரிகிறது... இரு வீட்டில் இருந்த பிள்ளைகளும், பெரியவர்களும் சந்தேகப்படும்படி அப்பட்டமாகவே காதல் லீலைகள் நடந்திருக்கின்றன.

ஜோடி எஸ்கேப்
இதை பற்றி எப்படி இவர்களிடம் கேட்பது என்ற தெரியாமல் இரு தரப்புமே கையை பிசைந்து விழித்து நின்றனர்.. இந்த சமயத்தில்தான் அந்த ஜோடி.. அதாவது சம்மந்திகள் எஸ்கேப் ஆகிவிட்டனர்.. எங்கே போய் தலைமறைவாகி விட்டார்களோ தெரியாது.. ஊரெல்லாம் பத்திரிகை கொடுத்த நிலையில், இவர்கள் ஓடிப்போய்விட்டது பெரிய அவமானத்தையும், அதிர்ச்சியையும் அக்குடும்பத்தினருக்கு ஏற்படுத்தியுள்ளது.. சம்பவம் குறித்து இரு வீட்டாரும் போலீஸில் புகார் அளித்துள்ளனர். முதுமை ஜோடிகள் ஓடிப்போய்விட்டதால், நடக்கவிருந்த இளம் ஜோடிகளின் கல்யாணமும் நிறுத்தப்பட்டுள்ளது.

சூரத் போலீசார்
இது சம்பந்தமான புகாரை பார்த்து சூரத் போலீசாரே கொஞ்சம் ஜெர்க் ஆகிவிட்டனர்... பிறகுதான் தெரியவந்தது, ஓடிப்போனவர்களுக்கு பல வருஷங்களுக்கு முன்பே லவ் இருந்துள்ளது.. ஆனால் அப்போது இவர்களால் கல்யாணம் செய்து கொள்ள முடியவில்லையாம்.. பிரசாந்த்தான், காதலித்த அந்த பெண்ணை வைர கைவினைஞருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

திருமணம் நின்றது
ரொம்ப வருஷம் கழிச்சு சந்தித்து கொண்டார்களாம். பார்த்தவுடன் பற்றி கொண்டுள்ளது என்கிறார்கள், இந்த ஜோடியை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்களாம்!! பிள்ளைகளை பற்றிகூட யோசிக்காமல் இவர்கள் ஓடிப்போனதுதான் பெரிய கவலையாக இருக்கிறது.. அட்லீஸ்ட் அவர்களுக்கு கல்யாண ஏற்பாட்டையாவது செய்யாமல் இருந்திருக்கலாம்.. இப்போது அந்த இளஞ்ஜோடிகளை நினைத்தாலே பாவமாக இருக்கிறது.. இந்த சம்மந்திகள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை!!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications