குழம்பு இருக்கு.. மட்டன் எங்கே.. திருமணத்தை நிறுத்திய மணமகன்.. வயிற்றெரிச்சலில் 90ஸ் கிட்ஸ்!
ஜெய்ப்பூர்: மணமகள் வீட்டார், மணமகனுக்கு அளித்த விருந்தில் மட்டன் பீஸ் இல்லாததால் கோபமடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்திவிட்டு வேறு ஒரு பெண்ணை மணந்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.
கியோன்ஜார் மாவட்டத்தில் சுகிந்தா வட்டத்தில் உள்ள பந்தாகான் கிராமத்தை சேர்ந்தவர் பத்ரா (27). இவருக்கு கடந்த புதன்கிழமை திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன.
அவர் திருமண மண்டபத்திற்கு வந்தவுடன் அவரை மணமகள் வீட்டார் வரவேற்று குல வழக்கப்படி சாங்கியங்களை செய்து முடித்தனர்.

கறி குழம்பு
பின்னர் சாப்பிடுவதற்காக டைனிங் அறைக்கு மணமகனும் அவரது வீட்டாரும் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது மட்டன் கறிக் குழம்பு வேண்டும் என மணமகன் வீட்டார் கேட்டனர். அதற்கு மணமகள் வீட்டார் , அந்த உணவை சமைக்கவில்லை என கூறினர்.

மாப்பிள்ளை
உடனே கோபமடைந்த மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடமும் உணவு பரிமாறியவர்களிடமும் சண்டை போட்டனர். இந்த விஷயம் மாப்பிள்ளை பத்ராவுக்கு தெரியவந்தது. அவர் வந்து சண்டையை சமாதானப்படுத்துவார் என பார்த்தால் அங்கிருந்தோருக்கு ஆச்சரியம்...

திருமணத்தை நிறுத்திய மணமகன்
மட்டன் கறி சமைக்காததற்கு திருமணத்தை நிறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாரிடம் மன்னிப்பு கேட்டும் அவர்கள் மனம் இறங்கவில்லை. பின்னர் சுகிந்தாவில் தான் தங்கியிருந்த உறவினர் வீட்டுக்கு பத்ரா சென்றுவிட்டார்.

வேறு பெண்ணுடன் திருமணம்
பின்னர் தனது சொந்த ஊர் செல்வதற்கு முன்னர் தம்கா மாவட்டத்தில் புலஜ்ஹாரா கிராமத்தில் வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டு சென்றுவிட்டார். இது தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் எந்த புகாரும் எழவில்லை. இந்த காலத்தில் பெண் கிடைப்பதே கஷ்டமாக இருக்கிறது, இதில் மட்டனுக்காக திருமணத்தையே நிறுத்திவிட்டாரே என 90 கிட்ஸ் கடும் கோபத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications