பர்ஸ்ட் நைட் காட்சி வீடியோவை ரிலீஸ் செய்த கொடுமை.. மாமியார் வீட்டில் கம்பி எண்ணும் மாப்பிள்ளை
ஆந்திராவில் முதலிரவு காட்சிகளை அப்படியே வீடியோவாக எடுத்து வெளியிட்ட நபர் கைது
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் புதிதாக திருமணம் செய்து கொண்ட நபர் தனது முதலிரவு காட்சிகளை வீடியோவாக பதிவு செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம், அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கும் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது.
இதையடுத்து அவர்களுக்கு கடந்த மாதம் 8ஆம் தேதி திருமணம் நடந்தது. அதன்பிறகு புதுமண தம்பதிக்கு பெண் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது அந்த இளைஞர் தனது மனைவியுடன் உறவு கொண்ட காட்சிகளை அவருக்கே தெரியாமல் வீடியோ படமாக எடுத்துவிட்டதாக தெரிகிறது.

பர்ஸ்ட் நைட்
இதோடு தனது பர்ஸ்ட் நைட் வீடியோ என்ற பெயரில் அதை சமூகவலைதளத்திலும் வெளியிட்டாராம். இது பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஆத்திரமடைந்த மணமகள் வீட்டார், அந்த இளைஞரிடம் இது குறித்து கேள்வி எழுப்பினர். இது பெரிய வாக்குவாதத்தில் முடிந்தது.

பஞ்சாயத்தார்
மேலும் இந்த சம்பவத்தை ஊர் பஞ்சாயத்தார் பார்த்து அவர்களை சமாதானம் செய்தனர். மேலும் அந்த இளைஞரையும் சரமாரி கேள்விகள் கேட்டனர். எனினும் பெண் வீட்டார் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மனைவி
திருமணம் முடிந்த நபர் தனது மனைவி என்றும் பாராமல் அவருடன் உறவு கொண்ட காட்சிகளை வீடியோவாக எடுத்து வெளியிட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த வீடியோவை போலீஸார் நீக்கிவிட்டனர். மேலும் அந்த இளைஞர் ஏற்கெனவே இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பதை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணம்
திருமணம் நிச்சயிக்கப்பட்டால் ப்ரீ வெட்டிங் சூட், வளைகாப்பு, ஹனிமூன் செல்லும் இடங்கள் உள்ளிட்டவை குறித்து வீடியோக்களையும் புகைப்படங்களையும் இந்த காலத்து இளைஞர்கள் எடுத்து வருகிறார்கள் என்றால் இது போன்று மிகவும் விபரீதமான செயல்களிலும் ஈடுபடுவது பெரும் வருத்தத்தை அளிக்கிறது. ரயில் முன்பு, ஓடும் வெள்ளம் முன்பு, ஓடும் ரயிலில் இருந்து என எத்தனையோ ஆபத்தான இடங்களில் இருந்து செல்பி எடுக்கும் மோகத்தால் சிக்கி தவிக்கும் இளைஞர்கள் இப்படி முதலிரவையும் வீடியோவாக எடுப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications