மதுவில் கலக்க தண்ணீர் கொடுக்காததால் கொலை.. ஹரியானாவில் நடுங்க வைக்கும் துப்பாக்கி சூடு
ஹரியானாவில் உள்ள மதுக்கடை ஒன்றில் நேற்று கொடூரமான கொலை நடந்து இருக்கிறது.
சண்டிகர்: ஹரியானாவில் உள்ள மதுக்கடை ஒன்றில் நேற்று கொடூரமான கொலை நடந்து இருக்கிறது. அந்த மதுக்கடைக்கு உள்ளே நான்கு பேர் சேர்ந்து ஒருவரை கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அவரின் அப்பாவின் கண் முன்னே நடந்துள்ளது. சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் மரணம் அடைந்துள்ளார்.
மதுவில் கலக்க தண்ணீர் கொடுக்கவில்லை என்பதற்காகவே இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

இல்லை
ஹரியானாவில் இருக்கும் சிறிய மதுக்கடை ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மஹாபிர் மற்றும் அவரது மகன் நரேஷ் குமார் ஆகியோர் மது அருந்த சென்றுள்ளனர். அதே கடையில் மது குடித்துக் கொண்டு இருந்த நான்கு பேர் இவர்களிடம் தண்ணீர் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

பெரிதானது
இவர்கள் ஒவ்வொரு முறை தண்ணீர் இல்லை என்று சொல்லவும் சண்டை பெரிதாகி இருக்கிறது. அந்த நான்கு பேரும் சேர்ந்த நரேஷை தாக்கி இருக்கிறார்கள். பின் அங்கிருந்து உடனடியாக கிளம்பி இருக்கிறார்கள்.

துப்பாக்கி சூடு
ஆனால் கொஞ்ச நேரத்தில் அந்த நான்கு பேரும் மீண்டும் அங்கு வந்துள்ளனர். அதில் ஒருவன் துப்பாக்கியை வைத்து நரேஷை சுட்டு இருக்கிறான். நரேஷின் கழுத்தில் குண்டு பாய்ந்து அங்கேயே சுருண்டு விழுந்துள்ளான்.

வழக்கு பதிவு
சம்பவ இடத்திலேயே நரேஷ் மரணம் அடைந்துள்ளான். போலீஸ் இந்த நான்கு பேரில் இருவரை அடையாளம் கண்டு இருக்கிறது. அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications