வருகிறது குரூப் வீடியோ கால் அம்சம்.. உறுதி செய்த வாட்ஸ் ஆப்
இன்னும் சில வாரங்களில் வெளியாக இருக்கும் வாட்ஸ் ஆப் அப்ளிகேஷனின் அப்டேட்டில் குரூப் வீடியோ கால் அம்சம் சேர்க்கப்பட உள்ளது.
டெல்லி: இன்னும் சில வாரங்களில் வெளியாக இருக்கும் வாட்ஸ் ஆப் அப்ளிகேஷனின் அப்டேட்டில் குரூப் வீடியோ கால் அம்சம் சேர்க்கப்பட உள்ளது.
இனி வாட்ஸ் ஆப் புதிய அவதாரம் எடுக்க போகிறது என்று கூட சொல்லலாம். ஒரு அப்ளிகேஷன் அப்டேட்டில், புதிதாக ஒரு அம்சம் சேர்க்கப்பட்டு அதை வைத்து மக்கள் பேசிக்கொள்கிறார்கள் என்றால் அது பெரிய ஹிட் என்று அர்த்தம்.
அந்த வகையில் வாட்ஸ் ஆப்பின் ஒருநாள் ஸ்டேட்டஸ் அதிரிபுதி ஹிட். இதே ஐடியாவோடு பிடித்ததுதான், வாட்ஸ் ஆப் வீடியோ கால் அம்சம். இன்னும் சில நாட்களில் இந்த அப்டேட் வர உள்ளது.

கால்
முதலில் வாட்ஸ் ஆப் கால் வசதி கொண்டு வரப்பட உள்ளது. அந்த வசதிதான் ஏற்கனவே இருக்கிறதே என்று கேட்கலாம். ஆனால் இப்போது வரப்போவது, வாட்ஸ் ஆப் குரூப் கால் வசதி. மொபைலில் கான்பிரன்ஸ் கால் பேசுவது போலவே, இந்த வாட்ஸ் ஆப் குரூப் கால் மூலம் பேசலாம். ஒரே நேரத்தில் ஐந்து பேரிடம் இப்படி பேசலாம் என்று கூறப்படுகிறது.

குரூப் வீடியோ
அதேபோல் குரூப் வீடியோ கால் பேசும் வசதி ஏற்படுத்தப்பட இருக்கின்றது. முன்பு ஒரு சமயத்தில் ஒரு நபரிடம் மட்டுமே வாட்ஸ் ஆப்பில் வீடியோ காலில் பேச முடியும். ஆனால் அடுத்து வரும் அப்டேட்டில் நாம் இருக்கும் குரூப்பில் உள்ள 5 பேரிடம் ஒரே நேரத்தில் வீடியோ கால் பேச முடியும். இது மிகவும் தெளிவாக துல்லியமாக இருக்கும்.

எப்போது வரும்
வீடியோ கான்பிரன்ஸ் கால் வசதி என்று அழைக்கப்படும் இது அடுத்த அப்டேட்டில் ஆண்ட்ராய்ட் போன்களுக்கு வரும். தற்போது இந்த வசதி வாட்சப் பீட்டாவில் வந்துள்ளது. அதேபோல் ஆப்பிள் போன்களிலும் அடுத்த அப்டேட்டில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏன் இந்த வசதி
வாட்ஸ் ஆப் இப்போது உலகின் முன்னணி சாட்டிங் ஆப்பாக மாறிவிட்டது. ஆனால் இன்னும் வீடியோ கால், வாட்ஸ் ஆப் கால் வசதிகளில் அது பெரிய அளவில் முன்னேறவில்லை. சில போட்டி ஆப்கள் அதில் பெரிய சாதனை படைத்துள்ளது. அதை முறியடிக்கவே வாட்ஸ் ஆப் இந்த செயலில் இறங்கியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications