அவசர கதியில் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவதா? ராகுல் கடும் தாக்கு
டெல்லி: ஜி.எஸ்.டி வரி அவசர கதியில் அமல்படுத்தப்படுவதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் விதமாக சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி இன்று நள்ளிரவு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் இரவு 11 மணிக்கு கூடுகிறது.

இந்த நிகழ்ச்சியில் அனைத்து எம்பிக்களும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு பாஜக அரசு அழைப்பு விடுத்திருந்தது. பாஜக கூட்டணிக் கட்சிகள் இதில் பங்கேற்க உள்ளன. ஆனால் இந்த கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தி.மு.க. உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.
இந்நிலையில், ஜி.எஸ்.டி அமல்படுத்தப்படுவது குறித்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் டிவிட்டரில், 'மிகப்பெரிய வரி சீர்திருத்தமான ஜி.எஸ்.டி.யை அவசர கதியில் அமல்படுத்தப்படுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது. பா.ஜ.க. அரசு சுய விளம்பரத்துக்காகவே ஜி.எஸ்.டி.யை அரைவேக்காட்டுத்தனமாக அமல்படுத்துகிறது.
திறமையில்லாத அரசு மூலம் இந்த புதிய வரிவிதிப்பு நடைமுறை அமல் செய்யப்படுவது கவலையளிக்கிறது. கோடிக்கணக்கான சாதாரண மக்கள், சிறு வணிகர்கள், வர்த்தகர்களுக்கு சிரமம், பதற்றம் ஏற்படுத்தாத வகையில் ஜிஎஸ்டி அமல் செய்யப்பட வேண்டும்'' என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications