பட்டனை தப்பாக அழுத்தி.. தப்பாக ஓட்டு போட்ட 12 பாஜக எம்.பிக்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேறிய சரக்கு, சேவை வரி அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கு எதிராக ஆளும் கட்சியான பாஜக எம்.பிக்கள் 12 பேர் வாக்களித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான மறைமுக வரிமுறையை அமல்படுத்தும் நோக்கத்தில், பாராளுமன்றத்தில் கடந்த 24-ந் தேதி ஜி.எஸ்.டி. என்று அழைக்கப்படுகிற சரக்கு மற்றும் சேவை வரி அரசியல் சாசன திருத்த மசோதாவை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.

நிராகரித்த மத்திய அரசு

நிராகரித்த மத்திய அரசு

இந்த மசோதாவுக்கு அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இந்த மசோதாவை நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.

காங். வெளிநடப்பு

காங். வெளிநடப்பு

இந்த நிலையில், மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று பேசினார். ஆனால் அவரது பேச்சில் திருப்தியடையாத காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தது.

ஆதரவு அதிகம்

ஆதரவு அதிகம்

இருப்பினும் மசோதா, 352 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. 37 உறுப்பினர்கள், மசோதாவுக்கு எதிராக ஓட்டு போட்டனர். ஆதரித்து ஓட்டுபோடுவது கட்டாயம் என்று பாஜக எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்படியிருந்தும், பாஜகவை சேர்ந்த 12 வாக்குகள், சட்டத்திற்கு எதிராக விழுந்துள்ளன.

அது பிரிண்டிங் மிஸ்டேக்காம்

அது பிரிண்டிங் மிஸ்டேக்காம்

இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேலி செய்தபோது, வாக்கெடுப்பு மிஷினில் பிரச்சினை இருந்ததால்தான், சரியாக எண்ணிக்கை விவரம் வெளியாகவில்லை என்று சொன்னார். பாஜக எம்பிக்கள் வேண்டுமென்றே மாற்றி ஓட்டு போட்டார்களா, அல்லது தெரியாமல் ஓட்டு போட்டார்களா என்பது புரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+