ஜிஎஸ்டி - தங்கத்திற்கு 3 சதவீதம் வரி விதிப்பு.. அருண் ஜேட்லி அறிவிப்பு
டெல்லி: ஜி.எஸ்.டியில் தங்கத்திற்கு 3 சதவீதம் வரி விதிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி வரி ஜூலை 1ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் 15-வது ஜி.எஸ்.டி கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அருண் ஜேட்லி, ஜி.எஸ்.டி வரியில் தங்கத்திற்கு 3 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. பட்டை தீட்டப்படாத வைரங்களுக்கு 0.25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கூறினார்.
மேலும், 500 ரூபாய்க்கு குறைவாக வாங்கும் செருப்புகளுக்கு 5 சதவீதமும் 500 ரூபாய்க்கு மேல் வாங்கும் செருப்புகளுக்கு 18 சதவீதம் வரையிலும் வரி விதிக்கப்படுகிறது. பிஸ்கட்டுக்கு 18 சதவீதம், பருத்தி, நூல் ஆடைக்கு 12 சதவீதம், பீடிகளுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றார் அருண் ஜேட்லி. தற்போது தங்கத்திற்கு இறக்குமதி வரி 10 சதவிகிதம், 1 சதவிகிதம் வாட் வரி, 1 சதவிகிதம் கலால் வரி விதிக்கப்படுகிறது. தங்கம் மீதான ஜிஎஸ்டி வரி 2 சதவீதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
