குஜராத்தில் பாஜகவால் வெல்லவே முடியாத 7 சட்டசபை தொகுதிகள்- நாடு விடுதலை அடைந்தது முதலே காங். கோட்டை!
காந்திநகர்: குஜராத்தில் ஆட்சியை தக்க வைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இதுவரை வெல்லவே முடியாத 7 சட்டசபை தொகுதிகளில் இம்முறையாவது வெற்றி பெற வேண்டும் என்பதில்தான் பாஜக முனைப்பாக உள்ளது.
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சி அமைத்துள்ளன. இந்த இரு கட்சிகளுடன் இப்போது ஆம் ஆத்மி கட்சி மல்லுக்கட்டி களத்தில் நிற்கிறது.

குஜராத் தேர்தல்
குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. குஜராத்தில் பெரும்பான்மைக்கு தேவை 92 இடங்கள். குஜராத்தில் தொடர்ந்து பாஜக ஆட்சியில் இருந்தாலும் காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து அக்கட்சிக்கு தாவி உள்ள்னர். இதனால் கடந்த தேர்தலை விட இம்முறை குஜராத்தில் பாஜக மிக மிக வலிமையாகவே ஆட்சியில் நீடிக்கும் என கூறப்படுகிறது.

குஜராத் கருத்து கணிப்பு
குஜராத் சட்டசபை தேர்தல் தொடர்பான ஏபிபி-சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகளில், ஆளும் பாஜகவுக்கு 135 முதல் 143 இடங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக 36 முதல் 44 தொகுதிகள்தான் கிடைக்குமா; புதியதாக களமிறங்கி இருக்கும் ஆம் ஆத்மிக்கு 2 தொகுதிகள்தான் கிடைக்குமா.

7 தொகுதிகள்
குஜராத்தைப் பொறுத்தவரை பாஜகவின் வெற்றி உறுதி என்றே அக்கட்சி அசைக்க முடியாத நம்பிக்கையில் உள்ளது. ஆனாலும் பாஜகவுக்கு ஆகப் பெரும் கவலையாக இருப்பது 7 தொகுதிகள்தான். போர்சாத், ஜஹாடியா, அன்கலவ், டானிலிம்டா, மஹூந்தா, கர்பாதா, வியரா ஆகியவைதான் அந்த 7 சட்டசபை தொகுதிகள்.

ஒருமுறையும் வெல்லாத பாஜக
கடந்த 1962-ம் ஆண்டு முதல் இதுவரையிலான அத்தனை தேர்தல்களிலும் இத்தொகுதிகளில் காங்கிரஸ்தான் பெரும்பாலும் வென்றிருக்கிறது. சுயேட்சைகள் வென்றுள்ளனர். இதர கட்சிகள் ஜெயித்திருக்கின்றன. ஆனால் பாஜக இந்த தொகுதிகளில் ஒன்றில் கூட ஒரு முறைகூட வென்றதும் கிடையாது. இந்த முறையும் கூட ஏறத்தாழ இதே நிலைமைதான் உள்ளது.

வெல்ல வியூகம்
குஜராத்தைப் பொறுத்தவரை பாஜகவின் கோட்டை என்பதாகத்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த நிலையில் அவரது சொந்த மாநிலமான குஜராத்துக்கு ஏராளமான நிதி உதவிகள், திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. பாஜக இத்தனை செல்வாக்கு பெற்றிருந்த போதும் இந்த 7 தொகுதிகளில் வெல்வதுதான் அக்கட்சிக்கு சாத்தியமற்ற ஒன்றாக இருந்து வருகிறது என்கின்றனர் தேர்தல் வல்லுநர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications