குஜராத்தில் பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி கட்சி அரியணை ஏறும்.. அரவிந்த் கெஜ்ரிவால் அழுத்தமான நம்பிக்கை
மெஹ்சானா: குஜராத்தில் ஆளும் பாஜக அரசை வீழ்த்தி ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக டெல்லி முதல்வரும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெர்ஜிவால் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் மாநிலத்தில் 182 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
குஜராத்தில் பாஜகவின் கோட்டையாக இருந்த சூரத் மாநகராட்சியை உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. பஞ்சாப்பில் காங்கிரஸ் உட்கட்சி பூசலால் ஆட்சியை பறிகொடுத்தது. அதேபோல குஜராத் காங்கிரஸும் உட்கட்சி பூசலில் மோசமான நிலையில் உள்ளது. அண்மையில் காங்கிரஸின் ஹர்திக் பட்டேல், பாஜகவில் இணைந்திருந்தார்.

குஜராத்தில் காங்கிரஸ் இடத்துக்கு ஆம் ஆத்மி கட்சி முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மெஹ்சானா பேரணியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று பேசியதாவது:
குஜராத் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். பல தொகுதிகளில் மாநிலம் முழுவதும் எமது ஆம் ஆத்மி கட்சியினர் மக்களுடன் உரையாடினர். குஜராத் மாநில மக்களின் இப்போதைய தேவை என்பது அரசியல் மாற்றம்தான்.
மூவர்ணம் என்பது நமது கொடி. மூவர்ணம் என்பது நமது பெருமிதம். மூவர்ணம் என்பது நமது வாழ்க்கை. மூவர்ண பேரணியில் அனைத்து குஜரத் மக்களும் பங்கேற்க வேண்டும்.
குஜராத்தில் ஆளும் பாஜக அமைச்சர்கள் எங்களை திருடர்கள்; கொள்ளையர்கள் என்கின்றனர்; ஆனால் நாங்கள்தான் மருத்துவமனைகளையும் கல்வி நிறுவனங்களையும் கட்டிக் கொடுத்திருக்கிறோம் என்பதை மறந்துவிடுகின்றனர்.
நாட்டின் பல மாநிலங்களில் பாஜகவுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சியே உருவாகி வருகிறது. ஆம் ஆத்மி கட்சிதான் மக்களுக்கு இலவச மின்சாரம், குடிநீர் வழங்கி இருக்கிறது. குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றும். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications