பாஜக பி டீம்? ஜெய்ஶ்ரீராம் முழக்கம்,அயோத்தி செலவுக்கு பணம்- குஜராத்தில் உருமாறிய அரவிந்த் கெஜ்ரிவால்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது திடீரென பாஜகவினரைப் போல ஜெய்ஶ்ரீராம் என முழக்கமிட்டார் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால். அத்துடன் குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் பயணத்துக்கு நிதி உதவி வழங்கப்படும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருப்பது விவாதமாகி இருக்கிறது.

2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு எதிரான பெரும் அதிருப்தி அலையை உருவாக்கியதில் முதன்மை பங்கு வகித்தவர் அன்னா ஹசாரே. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீது பல்வேறு ஊழல் புகார்களை முன்வைத்து ஹசாரே நடத்திய போராட்டங்களை 2014 லோக்சபா தேர்தலில் பாஜக அமோகமாக அறுவடை செய்து ஆட்சியை கைப்பற்றியது.

Gujarat Assembly Election: Arvind Kejriwal chants Jai Shri Ram

அன்னா ஹசாரேவின் தளபதிகளில் ஒருவராக இருந்தவர்தான் அரவிந்த் கெஜ்ரிவால். ஹசாரேவிடம் இருந்து பிரிந்து ஆம் ஆத்மி கட்சியை தொடங்கினார். பாஜகவுக்கு எதிராக காங்கிரஸின் இடத்தை ஆம் ஆத்மி இப்போது நிரப்பி வருகிறது. டெல்லியில் காங்கிரஸை துடைத்துவிட்டு ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. அதேபோல பஞ்சாப்பிலும் காங்கிரஸை காலி செய்தது ஆம் ஆத்மி.

இந்த நிலையில் குஜராத், இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தல்கள் நெருங்கிவிட்டன. இந்த மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சி களமிறங்குகிறது. ஆகையால் இம்மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இன்னொரு பக்கம், ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக மத்திய விசாரணை ஏஜென்சிகள் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதால் பாஜக- ஆம் ஆத்மி இடையேதான் போட்டி என உருவகம் செய்யப்பட்டு தேர்தல் களத்தில் காங்கிரஸே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டு வருகிறது.

குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த தேர்தல் பிரசாரத்தின் போது பாஜகவின் இன்னொரு முகமாகவே தம்மை வெளிப்படுத்திக் கொண்டார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த பயணத்தின் போது ஜெய்ஶ்ரீராம் என கெஜ்ரிவால் முழங்கினார். அத்துடன் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு, ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால் நிதி உதவி வழங்குவோம் என்றார் கெஜ்ரிவால். அவரது இந்த பேச்சுகள் பாஜகவின் இன்னொரு முகமாக தம்மை வெளிப்படுத்துகிறாரா? கெஜ்ரிவால் என்ற விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+