வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு புகார்களுடன் முடிவடைந்தது குஜராத் முதல்கட்ட தேர்தல்
Recommended Video

காந்திநகர்: குஜராத் சட்டசபையின் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
ஆட்சியை தக்க வைக்கப்போவது பாஜகவா, அல்லது ஆட்சியை கைப்பற்றப்போவது காங்கிரசா என்ற எதிர்பார்ப்பு நாடுமுழுக்க நிலவுகிறது.

- மாலை 5 மணி நிலவரப்படி சுமார் 68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
-குஜராத் முதல்கட்ட தேர்தல்: மதியம் 2 மணி நிலவரப்படி 45.61 சதவீத வாக்குப்பதிவு
-மாலையில் விறுவிறு வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்ப்பு
-குஜராத் சட்டசபை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு: 3 மணி நிலவரப்படி, 35.52% வாக்குகள் பதிவு
-குஜராத் முதல் கட்ட வாக்குப் பதிவு- 30%
- முதல் கட்ட வாக்குப் பதிவில் 21.09% வாக்குகள் பதிவாகி உள்ளன
-இதுவரை 18% வாக்குகள் பதிவு
- குஜராத்தின் உப்லேடாவில் 126 வயது வாக்காளர் அஜிபா வாக்களித்தார்
- 70 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாக தகவல்
- பழுதடைந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுவதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல்
- குஜராத்தின் வடக்கு சூரத்தில்தான் மிக குறைவான வாக்காளர்கள் 1,57,520 பேர்
- கம்ரேஜில் அதிகபட்சமாக 4,28. 695 பேர் வாக்காளர்கள்.
- ஜூனாகத்தில் பாஜகவின் ரேஷ்மா பட்டேலுக்கு எதிராக பட்டேல் இளைஞர்கள் போராட்டம்; ஹர்திக் பட்டேல் அணியில் இருந்து பாஜகவுக்கு தாவியவர் ரேஷ்மா படேல்
A group of Patidars protest as BJP's Reshma Patel arrives to cast her vote in Junagadh, #GujaratElection2017 pic.twitter.com/cLGt3QZmFQ
— ANI (@ANI) December 9, 2017
- இன்றைய வாக்குப் பதிவு நடைபெறும் கட்ச் மாவட்டத்தின் அப்டாசா தொகுதிதான் மிகப் பெரியது. மொத்தம் 6278 ச.கிமீ பரப்பளவு கொண்டது இது.
- சூரத்தில் உள்ள கரன்ஞ் தொகுதிதான் மிகச் சிறிய தொகுதி. மொத்தமே 4 ச.கிமீ பரப்பளவு கொண்டது இது.
- இன்றைய தேர்தல் களத்தில் 57 பெண் வேட்பாளர்கள் உள்ளனர்.
- பரூச் அங்க்லேஸ்வர் வாக்குச் சாவடியில் மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது படேல் வாக்களித்தார்
- காங்கிரஸ் கட்சி 110 இடங்களுக்கும் அதிகமாக வென்று ஆட்சி அமைக்கும் என அகமது படேல் நம்பிக்கை
Senior Congress leader Ahmed Patel casts his vote in Bharuch's Ankleshwar, says 'Congress will win more than 110 seats' #GujaratElection2017 pic.twitter.com/V3CGobtwZ4
— ANI (@ANI) December 9, 2017
- ராஜ்கோட்டில் 30 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுது
- காலை 10 மணி நிலவரப்படி 15% வாக்குகள் பதிவு
- இன்று காலை 9 மணி வரை 8% வாக்குகள் பதிவு
- தற்போது முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 89 தொகுதிகளில் கடந்த தேர்தலில் 67 இடங்களை பாஜகவும் காங்கிரஸ் 16 ஐயும் கைப்பற்றியிருந்தது.
- முதல் கட்டவாக்குப் பதிவு நடைபெறும் சவுராஷ்டிரா பகுதியானது 11 மாவட்டங்களைக் கொண்டது.
- சவுராஷ்டிரா பிராந்தியம்தான் பட்டேல்கள் அதிகம் வசிக்கும் பகுதி.
- இன்று வாக்குப் பதிவை எதிர்கொள்ளும் சூரத்தும் பாஜகவின் தலைவிதியை தீர்மானிக்கும் பகுதி.
- சூரத்தில் வைரம் பட்டை தீட்டும் தொழில், ஜவுளித்துறை, ஜிஎஸ்டியால் மிகக் கடுமையாக பாதிப்பு
- இன்றைய தேர்தல் களத்தில் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, பிற்படுத்தப்பட்ட சமூகமான தாக்குர் தலைவர் அல்பேஸும் இருக்கின்றனர்.
- ராஜோட்ட் ரவி வித்யாலாய வாக்குச் சாவடியில் கிரிக்கெட் வீரர் புஜாரா வாக்களித்தார்
Cricketer Cheteshwar Pujara casts his vote in Rajkot's Ravi Vidayalaya booth. #GujaratElection2017 pic.twitter.com/NobynWfp6P
— ANI (@ANI) December 9, 2017
- டிசம்பர் 14-ல் 93 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
- 14 மாவட்டங்களில் 93 தொகுதிகளில் டிச. 14-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
- முதல் கட்ட வாக்குப் பதிவில் 24,689 வாக்குச் சாவடிகளில் 27,158 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- முதல் கட்ட வாக்குப் பதிவில் போட்டியிடும் 977 வேட்பாளர்களில் 198 பேர் கோடீஸ்வரர்கள்
- பரூச் பாகுமலி வாக்குச் சாவடியில் திருமணகோலத்துடன் மணமக்கள் வாக்களித்தனர்
A couple reaches polling booth in Bharuch's Bahumali building to cast their votes before their wedding ceremony #GujaratElection2017 pic.twitter.com/laEvfU75Zl
— ANI (@ANI) December 9, 2017
-சூரத்தில் 24 மின்னணு இயந்திரங்கள் தொழில்நுட்ப பிரச்சனைகளால் பழுதடைந்தன
- அம்ரேயில் வட்லி கிராமத்திலும் மின்னணு இயந்திரங்கள் பழுது. வாக்காளர்கள் நீண்டவரிசையில் காத்திருப்பு
27,158 EVMs being used in 24,689 polling stations in the first phase of #GujaratElection2017 pic.twitter.com/aHms4fnzeF
— ANI (@ANI) December 9, 2017
-குஜராத்தின் 5 மாவட்டங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுது
- ராஜ்கோட்டின் ஜேத்பூரில் 10 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுது
-குஜராத்தில் 150-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றுவோம்: குஜராத் பாஜக தலைவர் ஜிது வகானி
-ராஜ்கோட் தொகுதியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி வாக்களித்தார்.
-ராஜ்கோட் மேற்கு தொகுதியில் விஜய் ரூபானி போட்டியிடுகிறார்
CM Vijay Rupani casts his vote in Rajkot. He is contesting against Congress’ Indranil Rajyaguru from Rajkot-West seat #GujaratElection2017 pic.twitter.com/d38IIAPs0v
— ANI (@ANI) December 9, 2017
-குஜராத்தில் பாஜக 150 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா நம்பிக்கை
-குஜராத் தேர்தல் தொடர்பான கருத்துகணிப்புகளில் பாஜகவுக்கு சாதகம்; ஆனால் கணிசமான இடங்கள் குறையும் எனவும் சர்வே முடிவுகள்
- சூரத், பாவநகரில் நகரில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெறுகிறது
- குஜராத் தேர்தலில் முதல் முறையாக அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் வாக்களித்தது தொடர்பான ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுகிறது.
Gujarat CM #VijayRupani among early voters reached to cast his vote in #Rajkot West constituency.#GujaratElection2017 #PollsWithAIR pic.twitter.com/RoNyE6Hyba
— All India Radio News (@airnewsalerts) December 9, 2017
- முதல் கட்ட வாக்குப் பதிவில் 1.16 லட்சம் தேர்தல் அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்.
- முதல் கட்ட தேர்தலில் 977 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
- 24,689 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
- 2.12 கோடி பேர் முதல் கட்ட தேர்தலில் வாக்களிக்கின்றனர்
BJP Gujarat Chief Jitubhai Vaghani casts his vote in Bhavnagar #GujaratElection2017 pic.twitter.com/oHJ7ULxTj6
— ANI (@ANI) December 9, 2017
-குஜராத்தில் காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
-பெண்கள் உட்பட வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்
-குஜராத்தில் முதல்கட்ட சட்டசபை தேர்தல் தொடங்கியது
-89 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது
-குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு எந்த சவாலும் இல்லை- முதல்வர் விஜய் ரூபானி
-ஜாம்நகர் ஊரக தொகுதியில் அதிகபட்சமாக 27 வேட்பாளர்கள் போட்டி
Queue outside a polling booth in Surat #GujaratElection2017 pic.twitter.com/Fc7qK5LEYz
— ANI (@ANI) December 9, 2017
-ஜகாடியா, காண்டேவி தொகுதிகளில் குறைந்தபட்சமாக தலா 3 வேட்பாளர்கள் போட்டி
-குஜராத் தேர்தலில் மக்கள் பெருமளவில் வாக்களிக்க பிரதமர் மோடி அழைப்பு
-இளைஞர்கள் வாக்களிக்க ஆர்வம் காட்ட வேண்டும் என்று டிவிட்டரில் மோடி அழைப்பு












Click it and Unblock the Notifications