குஜராத்தில் அக்.30-ல் போர் விமான தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் மோடி- அப்ப தேர்தல் தேதி எப்போ?
அகமதாபாத்: குஜராத்தில் வரும் 30-ந் தேதி போர் விமானங்கள் தயாரிப்பு தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருக்கிறார். இதனால் குஜராத் மாநில சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிப்பு மேலும் தாமதமாகும் என கூறப்படுகிறது.
குஜராத் மற்றும் இமாச்சல சட்டசபைகளுக்கான பொதுத்தேர்தல் தேதி ஒரே நேரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இமாச்சல பிரதேசத்துக்கு மட்டும் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இமாச்சல் தேர்தல்
68 எம்.எல்.ஏக்களைக் கொண்ட இமாச்சல சட்டசபைக்கு நவம்பர் 12-ல் தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் குஜராத் சட்டசபை தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.

2017 ரிப்பீட்டு
கடந்த 2017-ம் ஆண்டும் இதேபோல் இமாச்சல பிரதேசத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின்னர் குஜராத் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. தற்போதைய இமாச்சல பிரதேச சட்டசபையின் பதவிக் காலம் ஜனவரி 8-ந் தேதியும் குஜராத் சட்டசபை பதவிக் காலம் பிப்ரவரி 18-ந் தேதியும் நிறைவடைகிறது. இதனால்தான் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் தாமதமாக அறிவிக்கிறது எனவும் கூறப்பட்டது.

மோடி பயணம்
ஆனால் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் தொடங்கி வைக்க இருப்பதால்தான் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அற்விக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. கடந்த 19-ந் தேதி குஜராத் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி ரூ15,670 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார். அதன்பின்னர் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

மீண்டும் குஜராத் செல்லும் மோடி
இந்நிலையில் பிரதமர் மோடி மீண்டும் அக்டோபர் 30-ந் தேதி குஜராத் மாநிலம் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, டாடா- ஏர்பஸ் நிறுவனங்களின் ரூ22,000 கோடி மதிப்பிலான போர் விமானங்கள் தயாரிப்பு தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த தொழிற்சாலையில் இருந்து 2026-ல் முதலாவது போர் விமானம் வானில் பறக்க உள்ளது. பிரதமர் மோடியின் இந்த பயணத்துக்கு பின்னரே குஜராத் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தெரிகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications