உங்க அம்மா கிட்ட பால் குடிச்சிருந்தா மோதிப் பாரு.. குஜராத் தேர்தல் களத்தில் பாஜக சண்டை நாறுது!
Recommended Video

அகமதாபாத்: குஜராத் சட்டசபைத் தேர்தலில் சீட் மறுக்கப்பட்ட பாஜக எம்.பி பிரபாத்சின் செளகானின் 2வது மனைவி ரங்கேஸ்வரியின் சவால் பேச்சு தேர்தல் களத்தை சூடாக்கியுள்ளது. தேர்தலில் சீட் தரப்பட்டுள்ள தனது வளர்ப்பு மகனின் மனைவிக்கு அவர் நேரடியாக சவால் விட்டுள்ளார். மேலும் எம்.பியின் மகனுக்கும் அவர் உங்க அம்மாவிடம் பால் குடிச்சிருந்தா என்னோடு மோதிப் பார் என்றும் சவால் விட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
குஜராத் சட்டசபைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு உட்கட்சி மோதலை சந்தித்து வருகிறது பாஜக. பன்ச்மஹால் லோக்சபா உறுப்பினர் பிரபாத்சின் செளகான் தனது 2வது மனைவி ரங்கேஸ்வரிக்கு காலோல் தொகுதியில் சீட் கேட்டிருந்தார். ஆனால் கட்சி மேலிடம் அதை நிராகரித்து விட்டது.
அதற்குப் பதிலாக பிரபாத்சின்னின் முதல் மனைவிக்குப் பிறந்த பிரவீன்சின் செளகாவின் மனைவி சுமனுக்கு சீட் கொடுத்து விட்டது. இதனால் பிரபாத்தும், ரங்கேஸ்வரியும் கடும் கோபமடைந்துள்ளனர்.

ரங்கேஸ்வரி ஆவேசம்
தனக்கு சீட் மறுக்கப்பட்டது குறித்து ரங்கேஸ்வரி செளகான் பேஸ்புக்கில் காட்டமாக எழுதியுள்ளார். அதில் சாராய வாசனையே இல்லாத குஜராத்தில் கள்ளச்சாராயத்தை விற்றுப் பிழைத்து வருபவர்கள் பிரவீனும், அவரது மனைவி சுமனும் என்று கோபமாக கூறியுள்ளார்.

தாய்ப்பால் குடிச்சவனா நீ
பிரவீனுக்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன். நீ உண்மையிலேயே உன் அம்மாவிடம் பால் குடித்திருந்தால், காலோல் தொகுதியில் மோதிப் பார். பகிரங்கமாக சவால் விடுகிறேன் என்றும் ஆவேசம் காட்டியுள்ளார் ரங்கேஸ்வரி.

கட்சி தாவி- கள்ளச்சாராய வியாபாரி
பிரவீன் ஒரு கள்ளச்சாராய வியாபாரி. அவரது மனைவி கட்சி தாவி. முன்பு காங்கிரஸில் இருந்தார். இப்போது பாஜக வந்துள்ளார். வந்ததுமே சீட் வாங்கியுள்ளார். இவர்கள் எப்படி மக்களை மதிப்பார்கள் என்றும் கேட்டுள்ளார் ரங்கேஸ்வரி.

7 தொகுதிகளில் பாஜகவுக்கு சிக்கல்
தனது மனைவிக்கு சீட் தரப்படாமல் போனதால் கோபமாக உள்ள பிரபாத்சின் செளகான், தனது எம்பி தொகுதிக்குட்பட்ட 7 சட்டசபைத் தொகுதிகளிலும் உள்ளடி வேலை பார்த்து பாஜகவைக் கவிழ்க்க முயற்சிப்பார் என்பதால் பாஜக தரப்பு கலவரம் அடைந்துள்ளது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications