நீட் தேர்வுக்கு குஜராத் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு - ஆளுநரிடம் மனு!
நீட் தேர்வுக்கு குஜராத் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் கோஹ்லியிடம் மனு அளித்துள்ளனர்.
காந்திநகர்: நீட் தேர்வானது குஜராத் மாநில பாடப்பிரிவுக்கு எதிரானது என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில ஆளுநர் கோஹ்லியிடம் காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர்.
நாடு முழுவதும் நீட் தேர்வை இந்த ஆண்டு முதல் மத்திய அரசு கட்டாயமாக்கியது. மருத்துவ சேர்க்கைக்கு தேசிய தகுதி காண் தேர்வு எனப்படும் நீட் தேர்வு கட்டாயமாக்கியதால் கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்று பெரும்பாலான மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் எதிர்ப்புகளையும் மீறி அந்த தேர்வு கடந்த மே மாதம் நாடு முழுவதும் நடைபெற்றது. இதை லட்சக்கணக்கான மாணவர்கள் எதிர்கொண்டனர். தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க தயார் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து மத்திய அரசிடம் தமிழக அரசு அவசர சட்ட வரைவை இன்று சமர்ப்பித்தது.
இந்நிலையில் நீட் தேர்வு மாநில பாடப்பிரிவு மாணவர்களுக்கு எதிரானது என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் காங்கிரஸ் தலைவர்கள் அம்மாநில ஆளுநர் கோஹ்லியிடம் மனு அளித்தனர்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications