இருந்ததையும் இழக்கும் காங்கிரஸ்.. நொறுக்கிய பாஜக.. வரலாறு காணாத வெற்றியாம்! இந்தியா டுடே கணிப்பு
காந்தி நகர்; குஜராத் சட்டசபை தேர்தல் தொடர்பாக இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு வெளியிட்டுள்ளது. குஜராத்தில் பாஜக மாபெரும் வெற்றிபெறும் என்று இந்த கணிப்பு தெரிவிக்கிறது.
குஜராத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது.முதல் கட்ட தேர்தலில் 62 சதவிகித வாக்குகள் பதிவானது. அங்கு மெஜாரிட்டி பெற 92 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.
இரண்டாம் கட்ட தேர்தல் இன்று 14 மாவட்டங்களில் உள்ள 93 இடங்களில் நடைபெற்றது. ஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான எக்சிட் போல் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

கணிப்புகள்
குஜராத் சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. பல்வேறு ஊடகங்கள் மேற்கொண்ட கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. பாஜக 2017 தேர்தலில் 99 இடங்களை மட்டுமே வென்ற நிலையில் இந்த முறை 128 -148 இடங்களை பெற்று வெற்றிபெறும் என்று ரிபப்ளிக் டிவி கணிப்பு வெளியிட்டு உள்ளது. அங்கு மெஜாரிட்டி பெற 92 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். குஜராத் எக்சிட் போலின்படி காங்கிரஸ் 30 - 42 இடங்களை பெறும் என்று ரிபப்ளிக் டிவி கணிப்பு வெளியிட்டு உள்ளது. ஆம் ஆத்மி 2 - 10 இடங்களை பெறும் என்று இந்த ரிபப்ளிக் டிவி கணிப்பு தெரிவிக்கிறது.

இந்தியா டுடே
இன்னொரு பக்கம் குஜராத்தில் பாஜக 131-151 இடங்களை பெற்று வெல்லும் என்று இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு வெளியிட்டுள்ளது. பாஜக 2017 தேர்தலில் 99 இடங்களை மட்டுமே வென்ற நிலையில் இந்த முறை 128 -148 இடங்களை பெற்று வெற்றிபெறும் என்று இந்தியா டுடே கணிப்பு வெளியிட்டு உள்ளது. அங்கு மெஜாரிட்டி பெற 92 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். கடந்த தேர்தலில் பாஜக அங்கு பெரிய சரிவை சந்தித்து. காங்கிரஸ் கட்சியின் எழுச்சியாக பார்க்கப்பட்டது. பாஜகவின் அஸ்தமனம் அங்கு தொடங்கிவிட்டதாக கூறப்பட்டது.

கணிப்பு
ஆனால் அதை எல்லாம் உடைத்து நொறுக்கும் வகையில் பாஜக மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. கடந்த முறை வென்றதை விட கிட்டதட்ட 40 தொகுதிகள் கூடுதலாக வெல்லும் வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் குஜராத்தில் வரலாறு காணாத வெற்றியை பாஜக பெறும் என்று கணிப்பு தெரிவித்துள்ளது. இதுவரை 6 தேர்தல்களில் அங்கு பாஜக வெற்றிபெற்றுள்ளது. இந்த முறை 7வது தடவையாக அங்கு பாஜக வெற்றிபெறுகிறது. 1995ல் ஹரிச்சந்திரா பட்டேல் தலைமையில் பாஜக வென்றதில் இருந்தே அங்கு பாஜகதான் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறது.

எத்தனை இடம்
காங்கிரஸ் 16-30 இடங்களை வெல்லும் என்று இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு தெரிவிக்கிறது. அதாவது கடந்த தேர்தலில் காங்கிரஸ் 77 இடங்களை வென்றது. அதில் இருந்து 30க்கும் மேற்பட்ட இடங்களை காங்கிரஸ் இழக்கும். இருந்த இடங்களையும் இழக்கும் மோசமான நிலையில் காங்கிரஸ் உள்ளது. ஆம் ஆத்மி 9-21 இடங்களை வெல்லும் என்று இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு தெரிவித்து உள்ளது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications