For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெற்றி எங்களுக்கே... 11 மணிக்கே இரு விரலை உற்சாகமாக காட்டிய மோடி

வெற்றி எங்களுக்கே என்று இரண்டு விரலை உற்சாகமாக காட்டியுள்ளார் பிரதமர் மோடி.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    11 மணிக்கே இரு விரலை உற்சாகமாக காட்டிய மோடி- வீடியோ

    டெல்லி: குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலையில் வெற்றி பெற்றதால் வெற்றி சின்னம் காட்டி பிரதமர் மோடி மகிழ்ச்சியடைந்துள்ளார். காலை 11 மணிக்கே அவர் வெற்றிச் சின்னத்தை காட்டினார் என்பதுதான் சுவாரஸ்யம்.

    குஜராத், இமாசல பிரதேச மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. காலை முதலே பாஜக, காங்கிரஸ் கட்சிக்கிடையே கடும் போட்டி நிலவியது. காங்கிரசின் கை ஓங்கியது. பின்னர் பாஜகவின் தாமரையே இரு மாநிலங்களிலும் முன்னிலை வகித்தது.

    Gujarat election result 2017: PM Modi flashes victory sign

    காங்கிரஸ், பாஜக கட்சித்தலைவர் யாருமே இது குறித்து கருத்து கூறவில்லை. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வருகை தந்தார். காரில் இருந்து இறங்கிய அவர் வெற்றி சின்னமாக இரண்டு விரல்களை பத்திரிக்கையாளர்களை நோக்கி காட்டி விட்டு சென்றார்.

    குஜராத் மாநிலத்தில் பாஜகவை மண்ணை கவ்வ வைக்க வேண்டும் என்று எதிர்கட்சியினர் போராடினர். ஆனால் பாஜகவே முன்னிலை பெற்றுள்ளது.

    இமாசல பிரதேசத்தில் பாஜக 44 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலின் போது பாஜகவை விட வெறும் 10 இடங்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருந்தது.

    ஆனால் இந்த முறை நடைப்பெற்ற தேர்தலில் தற்போதைய நிலவரப்படி பாஜக 42, காங்கிரஸ் 23, பிற கட்சிகள் 3 என காங்கிரஸின் கையில் இருந்த ஆட்சியை, பாஜக கைப்பற்றியுள்ளது. அங்கும் மோடியின் அலை அடிக்க வீசத் தொடங்கியுள்ளது.

    அதெல்லாம் சரிதான்.. 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் முடிவின் போதே அதிமுகவிற்கு 11 மணிக்கே வாழ்த்து சொன்னார் பிரதமர் மோடி. அதே போல குஜராத் தேர்தல் முடிவு வெளியாகும் போதே 11 மணிக்கே வெற்றிச் சின்னத்தை காட்டியுள்ளார் மோடி.

    English summary
    As ruling BJP leading is in over 100 seats, Prime Minister Narendra Modi was seen flashing victory sign after he arrived at the Parliament on Monday. The Winter Session of Parliament is underway.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X