மருமகளுக்கு எதிராக மாமனார் பிரச்சாரம்.. ஜாம்நகரில் வெற்றிபெற்ற ஜடேஜா மனைவி! அடிச்சு தூக்கிய ரிவபா!
காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலின் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. 2017ல் இங்கு 99 இடங்களில் மட்டும் வென்ற பாஜக, இந்த முறை 156 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் வெறும் 17 இடங்களுக்கு சுருங்கி உள்ளது. ஆம் ஆத்மி 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இதன் மூலம் 7வது முறையாக மீண்டும் அங்கு பாஜக ஆட்சி அமைந்துள்ளது.

ஜாம்நகர்
இதில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் ரிவபா ஜடேஜா காலையில் இருந்து முன்னிலை வகித்து வந்தார். காங்கிரஸ் வேட்பாளர் பிபேந்திரசிங் சதுர்சிங் ஜடேஜாவை எதிர்த்து இவர் முன்னிலை வகித்து வந்தார். ரண்டு பேருமே ராஜ்புட் பிரிவான ஜடேஜா வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் தூரத்து சொந்தம்தான். அதாவது பங்காளிகள் போல. இவர்களுக்கு இடையில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்திய வீரர் ஜடேஜாவின் மனைவிதான் ரிவபா ஜடேஜா. இந்த தொகுதி பாஜகவின் கோட்டை ஆகும்.

ஜாம்நகர் வடக்கு
ஜாம்நகர் வடக்கு தொகுதியில் கடந்த 2014ல் இருந்தே பாஜகதான் வென்று வருகிறது. அங்கு சிட்டிங் எம்எல்ஏவாக இருந்தவர் பாஜகவின் தர்மேந்திரசிங் எம் ஜடேஜா. இவருக்கு இந்த முறை சீட் கொடுக்காமல் ரிவபா ஜடேஜாவிற்கு பாஜக சீட் கொடுத்தது. ரிவபா ஜடேஜா கடந்த 2019ல் பாஜகவில் இணைந்தார். ஜாம்நகர் - சவுராஷ்டிரா பகுதிகளில் கடந்த 2 வருடமாக இவர் தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வந்தார். அதன் காரணமாக ஜாம்நகர் வடக்கு தொகுதி ரிவபா ஜடேஜாவிற்கு வழங்கப்பட்டது. இங்கு இருக்கும் கிராமங்களுக்கு இவர் நடைபயணம் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

ரிவபா ஜடேஜா
ரிவபா ஜடேஜா ராஜ்புட் இயக்கமான கர்னி சேனாவில் இருக்கிறார். இந்த இயக்கம் மீது ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஜடேஜாவை 2016ல் ரிவபா ஜடேஜா திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில்தான் பாஜகவில் போட்டியிட்ட ரிவபா ஜடேஜாவிற்கு எதிராக அவரின் சொந்த மாமனார் குடும்பமே பிரச்சாரம் செய்தது. ஜடேஜாவின் அப்பா அனிரூத் சிங் ஜடேஜா தீவிர காங்கிரஸ் உறுப்பினர். அவரின் குடும்பமும் காங்கிரஸ் குடும்பம்.

ஆம் ஆத்மி
இவர்களின் குடும்பத்தில் சிலர் ஆம் ஆத்மி கட்சியிலும் நிர்வாகிகளாக இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் தேர்தலின் போது ரிவபா ஜடேஜாவிற்கு எதிராக அவரின் மாமனார் குடும்பம் பிரச்சாரம் செய்ததும். தீவிரமாக பிரச்சாரம் நடந்தாலும் தனிப்பட்ட தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை. அதே சமயம் ஜடேஜா தனது மனைவி ரிவபா ஜடேஜாவிற்காக தெரு தெருவாக பிரச்சாரம் செய்தார். ஒரு பக்கம் அப்பா காங்கிரஸ் வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்ய மகன் தனது மனைவி பாஜக வேட்பாளர் ரிவபா ஜடேஜாவிற்கு பிரச்சாரம் செய்தார். இதனால் குஜராத் தேர்தலே மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டு இருந்தது. இந்த நிலையில்தான் ஜாம்நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிபேந்திரசிங் சதுர்சிங் ஜடேஜாவை பின்னுக்கு தள்ளி பாஜகவின் ரிவபா ஜடேஜா முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் ரிவபா ஜடேஜா 84336 வாக்குகள் பெற்று வென்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் பிபேந்திரசிங் சதுர்சின் ஜடேஜா 22822 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார். இதன் மூலம் ஜடேஜா மனைவி ரிவபா ஜடேஜா முதல்முறையாக குஜராத் சட்டசபைக்கு செல்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications